October 18, 2016
மனைவி தொல்லை தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்ட கணவன்!
தனது மனைவியின் தொல்லை தாங்கமுடியாமல் கணவன் தூக்கி தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் பிப்பேவாடியில் வசிப்பவர் மகேஷ் மாருது ஹாட்ஜீ (37). டிரைவராக வேலைசெய்துவரும் மகேஷ், தனது முதல் திருமணத்தில் இருந்து விவாகரத்து பெற்ற பின் இரண்டாவதாக 27 வயது பெண்ணை மணந்து கொண்டார்.
அவர்கள் மகேஷின் சொந்த வீட்டில் முதல் மாடியில் குடியிருந்துள்ளனர். வீட்டின் தரைத்தளத்தில் மகேஷின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் நிலேஷ் ஆகியோர் வசித்துவந்துள்ளனர். திருமணமான புதிதில் அவர்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்றும், ஆனால் சிறிது காலத்துக்கு பின் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக அவரது மனைவி கோவித்துக்கொண்டு மும்பையில் உள்ள அவரது அம்மாவீட்டுக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் அன்று முழுதும் வேலைக்கு செல்லாமல் மகேஷ் தனது ரூமிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது சகோதரர் நிலேஷ் அவரது ரூமுக்கு சென்று பார்த்தபோது, உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து பார்த்த போது, மகேஷ் சீலிங் பேனில் தூக்கு மாட்டி தொங்கியிருந்தார்.
தவிர, அவரது கையில் இருந்து ஒரு கடிதத்தையும் அவர் கைப்பற்றினார். அதில் எனது மரணத்துக்கு முழுக்காரணம் எனது மனைவியின் தொல்லை தான். இதில் எனது குடும்பத்தாருக்கு எந்த சம்மந்தமும் இல்லை. என அதில் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து நிலேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து மகேஷின் மனைவி மீது அப்பகுதி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மனைவி தொல்லை தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்ட கணவன்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 18, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 18, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.