October 23, 2016
ஜெயலலிதா மரணம் என வதந்தி பரப்பிய தமிழச்சி கைது?
தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்து விட்டதாக பேஸ்புக்கில் வதந்தி பரப்பிய தமிழச்சி பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த அக்டோபர் 22-ம் திகதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், முதல்வர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக பிரான்ஸில் உள்ள தமிழச்சி என்ற பெண் அதிர்ச்சி தகவலை பேஸ்புக்கில் வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் வதந்திகள் தொடர்ந்து பரவியதால் இதற்கு காரணமான 8 பேரை பொலிசார் கைது செய்தனர்.
மேலும், பிரான்ஸில் உள்ள தமிழச்சி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த மத்திய பிரமுகர் ஒருவர் பிரான்ஸ் தூதரகம் மூலம் புகார் கொடுத்ததாகவும், இப்புகாரை தொடர்ந்து பிரான்ஸில் தமிழச்சி அந்நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதே சமயம், இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றும், பிரான்ஸ் நாட்டு சட்டப்படி வதந்தி பரப்புபவர்களுக்கு அபாரதம் மட்டுமே விதிக்கப்படும் எனவும், கைது நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மரணம் என வதந்தி பரப்பிய தமிழச்சி கைது?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 23, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 23, 2016
Rating: 5
1 comment:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.
Subscribe to:
Post Comments (Atom)


வதந்தி மட்டும் பரப்பவில்லை தமிழச்ச்சி !!!!தனது பதிவுகளின் மூலம் வன்முறை கலவரம் தூண்டுதல்களுக்கு முக்கிய காரணமாக இருந்தாள்!!!! அது பிரான்சு நாட்டு சட்டப்படி தீவிரவாத தூண்டுதல் பதிப்புகளுக்கு சமம் என்கிற பிரிவில் தற்போது விசாரணைக்கு கைதியாக இருக்கும் உமா ஷிவா என்கிற தமிழச்சி முழு கைதியாக மாற இயலும்.
ReplyDelete