Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 25, 2016

சமாஜ்வாதி கட்சி அலுவலகம் முன்பு அகிலேஷ், ஷிவ்பால் ஆதரவாளர்களிடையே மோதல்



சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசலால் தொண்டர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன், தலைவர் முலாயம் சிங் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.


முலாயம் சிங்கின் சகோதரர் ஷிவ்பால் யாதவ் உள்ளிட்ட 4 பேரை அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக நீக்கினார். இதையடுத்து அகிலேஷ் ஆதரவாளர்கள், ஷிவ்பால் ஆதரவாளர்கள் இடையே பிளவு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

கட்சி பிளவுபட்டால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும் பாதிப்பு ஏற்படும் என சமாஜ்வாதி தொண்டர்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்நிலையில், கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களுடன் தலைவர் முலாயம் சிங் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.

குடும்பம் மற்றும் கட்சியில் ஏற்பட்டுள்ள பூசலை சமாளிக்க, தன்னையோ அல்லது சகோதரர் ஷிவ்பால் யாதவையோ முலாயம் சிங் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, முலாயம் சிங் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ள லக்னோ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஏராளமான கட்சித் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

இதில் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயமின் சகோதரர் ஷிவ்பால் யாதவ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இதன் காரணமாக காவல்துறையினருக்கும், சமாஜ்வாதி கட்சித் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.