Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 26, 2016

விலை மாதுகளை கொடூரமாக கொலை செய்த நபர்..! அதிர்ச்சி அளிக்கும் காரணம்..!!



இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் இரு விலைமாது பெண்களை அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Rurik Jutting(31) என்ற நபர் கடந்த 2014ம் ஆண்டு ஹாங்காங் நகருக்கு சுற்றுலா சென்றபோது அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார்.

அப்போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வந்த இந்தோனேசியா நாட்டை சேர்ந்த Sumarti Ningsih(23) என்ற பெண்ணை அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வரவழைத்துள்ளார்.

அளவுக்கு அதிகமாக போதை மருந்து எடுத்துக்கொண்ட அவர், விலைமாது பெண்ணை பலாத்காரம் செய்ய கட்டிப்போட்டுள்ளார்.

பின்னர், அந்த பெண்ணை நிர்வாணமாக்கி, அவருடைய புருவங்களை வெட்டி எடுத்துள்ளார். அந்த பெண்ணை பல முறை பலாத்காரம் செய்து அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டார்.

சுமார் 4 மணி நேர சித்ரவதைக்கு பிறகு அந்த விலைமாது பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு இந்தோனேசியாவில் ஒரு வயது குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சம்பவம் நிகழ்ந்து 4 தினங்களுக்கு பிறகு Seneng Mujiasih(26) என்ற விலைமாது பெண்ணையும் ஹோட்டலுக்கு வரவழைத்து கொடூரமாக பலாத்காரம் செய்து அதே பாணியில் கொலை செய்துள்ளார்.

இந்த இரண்டு கொலைகளையும் அவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில், போதை மருந்து பழக்கம் காரணமாக தான் இவர்களை கொலை செய்ததாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.