October 27, 2016
ஆண் வாரிசு பெற்றுத்தராததால் விவாகரத்தா?
பிரபல தென்னிந்திய நடிகை ரம்பா தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி சென்னை குடும்பநல நீதிமனறத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், ஹிந்தி, போஜ்புரி, பெங்காலி ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரம்பா, கடந்த 2010ம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த இந்திரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்றது.
தொழிலதிபராக இருந்த இந்திரனின் மேஜிக்வுட் நிறுவனத்தின் தூதராக நடிகை ரம்பாக நியமிக்கப்பட்டபோது, இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இந்து திருமண சட்டபிரிவு 9-ன் கீழ் தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், தங்களை சேர்த்து வைக்கக் கோரியும் நடிகை ரம்பா மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் ரம்பா கூறியிருப்பதாவது: கடந்த சில வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நிலையில் குழந்தைகளை கவனித்து கொள்வதில் கஷ்டமாக இருப்பதாகவும், தற்போது தான் குடும்ப வாழ்க்கையை நல்ல முறையில் புரிந்து கொண்டுள்ளதாகவும் கருணை அடிப்படையில் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரியும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது குடும்பத்திற்கு ஆண் வாரிசு பெற்றுத்தரவில்லை என்ற காரணத்தினால் தன்னுடைய கணவரும், அவரது குடும்பத்தாரும் மிகவும் கொடுமைப்படுத்தியாகவும், அதனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை இரண்டாவது கூடுதல் குடும்பநல நீதிமன்றத்தில் ரம்பா தாக்கல் செய்த மனு, வருகிற டிசம்பர் 3ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆண் வாரிசு பெற்றுத்தராததால் விவாகரத்தா?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.