October 3, 2016
பூ ஒன்றை புயலாக்கிய அரசியல்..! மங்கம்மாவாக…சபதம் எடுத்த ஜெ..! இனி ‘அவர்கள்’ ஒரு நாள் நிம்மதியாக அரசி
ஆமாம் பூ போன்று தான் அரசியலில் அடி எடுத்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.நடிகையாக மிக வசதியாக வாழ்ந்தவர் முதல்வர்.
நிறைய வாசிக்கும் பழக்கம், உதவும் குணம், அபாரமான உலக அறிவு. தொலை நோக்குப் பார்வை. நாகரிகமானபழக்கவழக்கங்கள்.
இப்படி இருக்கும் போது தான் மக்கள் திலகம் அவர்களால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர்.
மக்கள் திலகம் உடல்நலம் குன்றி அமெரிக்கா சென்றபோது தனி ஒரு மனுஷியாக தமிழ் நாடு முழுவதும் சுற்றி வந்தவர் ஜெயலலிதா.
அந்த தேர்தலில் மகத்தான வெற்றியை அறுவடை செய்து தலைவர் பாதங்களில் சமர்பித்தார்.
எம்ஜிஆர் மறைந்த போது தான் சோதனைகள், வேதனைகள் சூழ ஆரம்பித்தது. அதன் பின் 89 தேர்தலில் வெற்றி பெற்று சட்ட மன்றம் சென்றார் ஜெயலலிதா.
அங்குதான் அந்த கொடூரத்தை நிகழ்த்தினார்கள் சில மனித மிருகங்கள். ஆம் பெண் என்றும் பாராமல் சட்ட மன்ற வளாகத்தில் அடிகளை இழுத்து, முடியைப் பிடித்து இழுத்து அவமானப் படுத்தினார்கள்.
தலைவிரி கோலமாக அம்மா வெளியே வந்து நின்ற காட்சி காண்போரை திடுக்கிட வைத்தது. தமிழ் நாடு பெண்கள் அதிர்ந்து போனார்கள்.
பூவாய் இருந்த ஒரு பெண்ணை புயாலாய் மாற்றிய சம்பவம் அது தான். அதன் பின் வீறு கொண்டு எழுந்த அம்மாவின் வெற்றியால் துவண்டு போனார்கள் அரசியல் எதிரிகள்.
அதன் பின் இன்றுவரை ஒருநாள் கூட அவர்களால் நிம்மதியாக அரசியல் செய்ய முடியவில்லை…!
ராணி மங்கம்மா வாக நிமிர்ந்தார் ஜெ..
பூ ஒன்றை புயலாக்கிய அரசியல்..! மங்கம்மாவாக…சபதம் எடுத்த ஜெ..! இனி ‘அவர்கள்’ ஒரு நாள் நிம்மதியாக அரசி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 03, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 03, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.