Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 5, 2016

'தமிழ்நாட்டை ஞாபகம் இருக்கிறதா மோடி அவர்களே!?' டெல்லியில் தகித்த தம்பிதுரை


காவிரி நதிநீர் பிரச்னையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி டெல்லியில் அதிமுக எம்.பிக்கள் அனைவரும் பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

காவிரி விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகளுக்கு இடையே நிரந்தர தீர்வை காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி இருந்தது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என மத்திய அரசு நேற்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.  மத்திய அரசின் இந்த செயலால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கொந்தளிப்பில் உள்ளனர். கர்நாடகா அரசுக்கு ஆதரவாக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர். இந்நிலையில்,

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில், அ.தி.மு.க எம்.பி.க்கள் அனைவரும் இன்று பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். ஆனால் நேரம் ஒதுக்கப்படாததால், அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் திடீரென பிரதமர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். பிரதமர் அலுவலகத்தின் நுழைவாயிலில் அனைத்து எம்.பி.க்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், பிரதமரைச் சந்திக்க அனுமதியும் மறுக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கும் அ.தி.மு.க எம்.பி.க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அனைவரும் அவரவர் தொகுதி மக்கள் பிரச்னைகளுக்காக பிரதமரை சந்திக்க  வந்திருப்பதாக எம்.பி.க்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவநீதகிருஷ்ணன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.  பாதுகாப்பு காரணங்களுக்காக, அனைத்து எம்.பி.க்களும் பிரதமர் அலுவலக வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த எம்.பி.க்கள் அனைவரும் அலுவலக நுழைவாயிலிலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் அலுவலகத்தில்   அனுமதிக்கப்பட்ட 7 எம்.பி.க்கள், பிரதமர் அலுவலக செயலரிடம்  மனு அளித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.பி. தம்பிதுரை, "தமிழக மக்கள் மீது மத்திய அரசுக்குக் கொஞ்சமும் அக்கரை இல்லை. கடந்த காங்கிரஸ் ஆட்சி செய்த அதே தவறை, பாஜக அரசும் செய்து வருகிறது. காவிரி விவகாரத்தை வைத்துக்கொண்டு, மத்திய அரசு அரசியல் செய்கிறது.  தமிழகம், இந்தியாவின் ஒரு பகுதிதான் என மத்திய அரசுக்கு அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. காவிரி விவகாரம் இன்று வரை தீர்க்கப்படாமல் உருவெடுத்து வளர்ந்து நிற்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே முழு காரணம்" என கொந்தளித்தார்.



பிரதமர் அலுவலகத்தைத் தொடர்ந்து மத்திய சட்ட அமைச்சகத்திடமும் சென்று கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். மேலும், மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமாபாரதியையும் நேரில் சென்று வலியுறுத்த இருந்த நிலையில், அவர் வெளியூர் சென்றுள்ளதாக கூறப்பட்டது. இதனால், தமிழக அரசு சார்பில், மத்திய நீர் வளத்துறைக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது. அதில், வாரிய விவாகரத்தில் மத்திய அரசின் , மனுவைத் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு கூறியிருந்ததையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே டெல்லியில் அதிமுக எம்.பிக்கள் அனைவரும் பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், அந்தப் பேரணி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.