Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 1, 2016

பயந்தரில் தாயை அடித்த பெண்ணை வாளால் வெட்ட வந்த கல்லூரி மாணவரால் பரபரப்பு போலீசார் கைது செய்து விசாரணை


பயந்தரில் தாயை அடித்த பெண்ணை வாளால் வெட்ட வந்த கல்லூரி மாணவரால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்
தானே பயந்தரை சேர்ந்தவர் தோனி கோபால் (வயது20). கல்லூரி மாணவர். இவர் தனது குடும்பத்துடன் அங்குள்ள பிளனேட்டரியா காம்ப்ளக்ஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் இவரது தாய்க்கும், பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் சண்டை ஏற்பட்டு உள்ளது. இந்த சண்டையின் போது தோனி கோபாலின் தாயை பக்கத்து வீட்டு பெண் அடித்து உதைத்ததாக தெரிகிறது.

கல்லூரி முடிந்து வீடு திரும்பியதும் தனது தாய் பக்கத்து வீட்டு பெண்ணால் தாக்கப்பட்டதை தோனி கோபால் அறிந்தார். இது அவருக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது.

வாளுடன் சென்றார்
உடனே தனது வீட்டில் இருந்த பெரிய வாளை எடுத்துக் கொண்டு அந்த பெண்ணை வெட்டுவதற்காக அவரது வீட்டை நோக்கி ஆவேசமாக ஓடினார். இதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் தோனி கோபால் வருவதற்குள் தங்கள் வீட்டு கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டனர்.

இருந்தாலும் ஆத்திரம் அடங்காத தோனி கோபால் 3–வது மாடியில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்குள் செல்வதற்கு கட்டிட சிலாப் மீது ஏறி பால்கனி வழியாக உள்ளே நுழைய முயற்சி செய்தார். ஆனால் அவரால் அந்த பெண்ணின் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை.

கைது
இதற்கிடையே அந்த கட்டிடத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் வளாகத்தில் திரண்டு விட்டனர். இதனால் பரபரப்பு உண்டானது. சிலர் உடனே போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் கீழே இறங்கிய தோனி கோபாலை குடியிருப்புவாசிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் தோனி கோபாலை கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.