Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 31, 2016

சட்டவிரோதமாக கடத்திவரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.38 கோடி சீனப்பட்டாசுகள் அழிப்பு


தீபாவளியையொட்டி சட்டவிரோதமாக கடத்திவரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.38 கோடி மதிப்புள்ள சீனப்பட்டாசுகள் அழிக்கப்பட்டது.

சீனாவில் இருந்து தீபாவளி சமயத்தில் இந்தியாவிற்கு அதிகளவு பட்டாசு இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் சீனப்பட்டாசுகள் தரமற்ற பேரியம் நைட்ரேட், பொட்டாசியம் நைட்ரேட், மெர்குரஸ் குளோரைடு, ஆர்செனிக் காம்பவுண்ட்ஸ் போன்ற ரசாயனங்களால் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதனால் சுற்றுச்சூழல் அதிகளவு மாசுபடும்.

இதையடுத்து கடந்த 2014–ம் ஆண்டு இந்தியாவில் சீனப்பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் தீபாவளியையொட்டி சீனாவில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.38 கோடி பட்டாசுகளை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் நேற்று முன்தினம் அந்த பட்டாசுகளை அழித்தனர். இதுகுறித்து வருவாய் புலனாய்வு இயக்குனரக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

தீபாவளியையொட்டி அதிகளவில் சீனப்பட்டாசுகள் கடத்திக்கொண்டு வரப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாங்கள் கடந்த 3 மாதங்களாக சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் சீனப்பட்டாசுகளை பறிமுதல் செய்து வந்தோம். மொத்தம் ரூ.38 கோடி மதிப்பிலான 38 கன்டெய்னர் பட்டாசுகள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த பட்டாசுகள் சுற்றுச்சுழலுக்கு மிகவும் அச்சுறுத்தலானவை. எனவே பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பட்டாசுகளையும் அழித்துவிட்டோம். இந்த அளவிற்கு இதற்கு முன் சீனப்பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.