Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 20, 2016

பீதி அடைய தேவையில்லை, அனைத்து ஏ.டி.எம். அட்டைகளும் பாதுகாப்பாக உள்ளது - நிதி அமைச்சகம்


இணையதள மோசடி அபாயம் எதிரொலியாக 32 லட்சம் ஏ.டி.எம். அட்டைகளை முடக்கி வங்கிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உள்ளநிலையில் பீதி அடைய தேவையில்லை, அனைத்து ஏ.டி.எம். அட்டைகளும் பாதுகாப்பாக உள்ளது என்று நிதிஅமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் உள்ள சில வங்கிகள் வழங்கிய ஏ.டி.எம். அட்டைகள், இணையதள மோசடி கும்பலின் அச்சுறுத்தலுக்கு இலக்காகி இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏ.டி.எம். அட்டையில் உள்ள ரகசிய குறியீட்டு எண் உள்ளிட்ட பாதுகாப்பு குறியீடுகளை திருடி, அக்கும்பல் பண மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. யெஸ் வங்கி என்ற தனியார் வங்கியின் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் வேலையை ஹிடாச்சி பேமண்ட் சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களில் ஊடுருவி பாதுகாப்பு குறியீடு திருட்டு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த மே மாதத்தில் இருந்து ஜூலை மாதத்துக்குள் இந்த திருட்டு நடந்துள்ளது. ஆனால், கடந்த மாதம்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது.

பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஐ.டி.பி.ஐ. வங்கி, சென்டிரல் வங்கி, ஆந்திரா வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, யெஸ் வங்கி ஆகிய வங்கிகளின் வாடிக்கையாளர்களுடைய ஏ.டி.எம். அட்டைகள், இணையதள மோசடி கும்பலின் அச்சுறுத்தலுக்கு இலக்காகி உள்ளன. 32 லட்சத்துக்கும் மேற்பட்ட அட்டைகளுக்கு இந்த அச்சுறுத்தல் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த வங்கிகள் உஷார் அடைந்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்களின் 6 லட்சம் ஏ.டி.எம். அட்டைகளை திரும்ப பெற்றுள்ளது. சில அட்டைகளை முடக்கி உள்ளது.

பேங்க் ஆப் பரோடா, ஐ.டி.பி.ஐ. வங்கி, சென்டிரல் வங்கி, ஆந்திரா வங்கி ஆகிய வங்கிகள், அச்சுறுத்தலுக்கு இலக்காகி உள்ள அட்டைகளை முடக்கி விட்டு, மாற்று அட்டைகள் வழங்கி உள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, யெஸ் வங்கி ஆகிய வங்கிகள், ஏ.டி.எம். அட்டையின் ரகசிய குறியீட்டு எண்ணை (பின்) மாற்றுமாறு வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி உள்ளன. எச்.டி.எப்.சி. வங்கி, தனது ஏ.டி.எம்.களில் மட்டுமே பணம் எடுக்குமாறு வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தவகையில், 32 லட்சத்துக்கும் மேற்பட்ட அட்டைகளும் முடக்கம் அல்லது திரும்ப பெறும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் பீதி அடைய தேவையில்லை, அனைத்து ஏ.டி.எம். அட்டைகளும் பாதுகாப்பாக உள்ளது என்று நிதிஅமைச்சகம் தெரிவித்து உள்ளது.

“நாட்டில் மொத்த ஏ.டி.எம். அட்டைகளில் 0.5 சதவிதம் அளவிலான டெபிட் கார்டுகள் மட்டுமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது, மற்ற 99.5 சதவித ஏ.டி.எம். அட்டைகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளது, வங்கி வாடிக்கையாளர்கள் பீதி அடைய வேண்டாம்.” என்று நிதித்துறை கூடுதல் செயலாளர் ஜி சி முர்மு கூறிஉள்ளார். டேட்டாக்கள் குறிப்பிட்ட இயந்திரங்களில் மற்றும் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே களவு போய் உள்ளது, குறிப்பிட்ட அளவிலேயே பிரச்சனை உள்ளது.

வங்கிகள் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை அவர்களுடைய அட்டையை மாற்ற கேட்டுக் கொண்டு உள்ளது, அல்லது ரகசியை எண்ணை மாற்ற கேட்டுக் கொண்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து கார்டுகளும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்து உள்ள செய்தியிஒல், “பாதுகாப்பு காரணமாக... உங்களுடைய கணக்கின் இரசிய எண்ணை மாற்றிக் கொள்ளுங்கள். இந்த அறிவிப்பை பின்பற்றவில்லை என்றால், நாங்கள் அட்டைகளுக்கு 21-ம் தேதியில் இருந்து தடை விதித்துவிடுவோம்,” என்று கூறிஉள்ளது.

ஹிட்டாச்சி ஏ.டி.எம். இயந்திரங்களில் கடந்த மே, ஜூன், ஜூலையில் பணபரிவர்த்தனை செய்யப்பட்டபோது தகவல்கள் திருடப்பட்டு உள்ளது என்று தெரியவந்து உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.