தன் வயதான பெற்றோரை உடன்வைத்து பராமரிக்க சம்மதிக்காத மனைவியை, ஒரு இந்து மகன் விவாகரத்து செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கர்நாடக தம்பதியர்
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் குமார கவுடா, சத்யவதி தம்பதியர் (பெயர் மாற்றித்தரப்பட்டுள்ளது). இவர்களுக்கு 1992–ம் ஆண்டு திருமணமானது.
குடும்பத்தில் குமார கவுடா மட்டுமே சம்பாதித்து வந்தார். இதன் காரணமாக, அவர், தனது பெற்றோரை தன்னுடன் வைத்து பராமரித்து வந்தார். ஆனால் இது மனைவி சத்யவதிக்கு பிடிக்க வில்லை. கணவரை, அவரது பெற்றோரிடமிருந்து பிரித்து தனியாக அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்று அவர் எண்ணினார். ஆனால் இதற்கு கணவர் சம்மதிக்கவில்லை.
விவாகரத்து
மனைவியின் செயல், குமார கவுடாவுக்கு மனதளவில் கொடுமையாக அமைந்தது. அவர் தன் பெற்றோரை பிரிய விரும்பாமல், மனைவியை பிரிந்துவிட முடிவு எடுத்தார்.
இதையடுத்து அவர் விவாகரத்து வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்தது.
ஆனால் அதை எதிர்த்து அவரது மனைவி ஐகோர்ட்டில் மேல்–முறையீடு செய்தார். அங்கு விவாகரத்து வழங்கி கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ரத்தானது. ஒரு மனைவி தனது கணவரின் வருமானம் தனக்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும், அவரது முழுக்குடும்பத்தினருக்கும் அல்ல என்று கருதுவது சட்டப்பூர்வமான எதிர்பார்ப்பு என்று கூறப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து குமார கவுடா, சுப்ரீம் கோர்ட்டில் மேல்–முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் அனில் ஆர் தவே, எல். நாகேஷ்வரராவ் ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணை முடிவில், தனது வயதான பெற்றோருடன் இருந்து அவர்களை பராமரிக்கிற பக்தியுள்ள கடமையை பறிக்கிற கொடுமையை செய்ய முயன்ற மனைவியை ஒரு இந்து மகன் விவாகரத்து செய்யலாம் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
தீர்ப்பின் சாராம்சம்
தீர்ப்பை எழுதிய நீதிபதி அனில் ஆர் தவே அதில் கூறிஇருப்பதாவது:–
பெற்றோரால் வளர்த்து, கல்வி புகட்டி, ஆளாக்கப்படுகிற மகனுக்கு, வயதான, வருமானம் இல்லாத அல்லது மிகக்குறைந்த வருமானமே உடைய தனது பெற்றோரை உடன்வைத்து பராமரிக்கிற தார்மீக கடமையும், சட்டப்பூர்வ கடமையும் இருக்கிறது.
இந்தியாவில் பொதுவாக மக்கள் மேற்கத்திய சிந்தனைகளை பெற்று பின்பற்றுவதில்லை. அங்குதான் திருமணமானதும் அல்லது வயது வந்ததும் மகன் குடும்பத்தை விட்டு பிரிந்து விடுகிறார்.
வழக்கமாக மனைவியானவள், கணவன் குடும்பத்தாருடன் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அவள் குடும்பத்தின் ஒருங்கிணைந்த பகுதி ஆகிறாள். எந்த ஒரு வலுவான காரணமும் இன்றி, குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து கணவர் தன்னுடன் மட்டுமே வாழ வேண்டும் என்று அவள் கட்டாயப்படுத்துவதில்லை.
திருமணமாகி விட்டால், மனைவியின் தூண்டுதலின்பேரில் பெற்றோரை விட்டு மகன் பிரிந்து விடுவது என்பது இந்து குடும்பத்தில் வழக்கமாக நடைபெறுகிற ஒன்று அல்ல. அதிலும் குறிப்பாக குடும்பத்தில் சம்பாதிக்கிற ஒரே நபராக மகன் இருக்கிற பட்சத்தில், அப்படி செய்வதில்லை.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.