October 30, 2016
கார் விபத்தில் சிக்கி 3 பேர் பலி!
அரியலூர் அருகே பாலத்தின் சுவற்றில் கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், இரு குழந்தைகள் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு இரு குடும்பங்கள் கார் ஒன்றில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தன. அரியலூர் மாவட்டம் காடுவெட்டி அருகே உள்ள கல்லமதகு ஓடைப்பாலம் அருகே சென்றபோது பக்கவாட்டுச் சுவற்றில் மோதி, கார் விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த ஒன்றரை வயதுள்ள இரு குழந்தைகள் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மூன்று பேர் திருச்சி தனியார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார் விபத்தில் சிக்கி 3 பேர் பலி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 30, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.