Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 20, 2016

தேர்தல் அறிவிக்கப்பட்ட 3 தொகுதிகளில் தேர்தல் நன்னடத்தை விதிகள் தீவிரமாக அமல்!



தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நன்னடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சைபுதீன் தலைமையில் தேர்தல் பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். முன்னதாக அரவக்குறிச்சி வட்டாச்சியர் அலுவலகத்தில் வாகன சோதனைக்கானக் குழு அமைக்கப்பட்டு, தேர்தல் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் வாகன சோதனைகளுக்கு மொத்தம் 12-குழுக்கள் அமைக்கப்பட்டு, 27-இடங்களில் வாகனச் சோதனை நடைபெற்று வருகிறது.
தஞ்சை தொகுதியில் 7 இடங்களில தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாட செய்ததாக வந்த புகாரை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு 276 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளது.
இதில் தேர்தல் கண்காணிக்க 6 பறக்கும் படைகளும், 3 நிலையான குழுக்களும், 3 வீடியோ கண்காணிப்பு குழுவும், நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தஞ்சைக்கு வரும் வாகனங்கள் அனைத்து தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. இதற்காக தஞ்சை நகரை சுற்றி மருத்துவக்கல்லூரி சாலை, நாஞ்சிகோட்டை, மாவட்ட ஆட்சியர் ஆலவலகம் என 7 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.