Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 17, 2016

ஒருநாள் விளம்பரத்துக்காக ரூ.36 கோடி செலவு செய்த கட்சி!



மத்திய பாஜக அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி கடந்த மே மாதம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் விளம்பரத்துக்காக ரூ.36 கோடி செலவானது தெரிய வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ,க அரசு பதவியேற்று கடந்த மே மாதத்துடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. அதையொட்டி, டெல்லி, இந்தியா கேட் பகுதியில் மே மாதம் 29 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சியின் செலவு குறித்து ஐ.ஏ.என்.எஸ்., செய்தி நிறுவனம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தது.
இதுகுறித்து விளக்கமளித்த மத்திய தகவல் ஒளிப்பரப்புத் துறையின் காட்சி விளம்பர இயக்குநரகம் அளித்த பதிலில், மத்திய அரசின் 2ம் ஆண்டு நிறைவையொட்டி டெல்லியில் நடந்த ‛ஏக் நயீ சுபா’ என்ற நிகழ்ச்சிக்காக நாளிதழ்களில் வெளியான விளம்பரங்களுக்கு ரூ.35.59 கோடியும்,
மின் ஊடகங்கள் வழி விளம்பரங்களுக்கு ரூ.1.06 கோடியும் செலவிடப்பட்டன. மேலும், இதுதொடர்பாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிக்கு ரூ.92 லட்சம் செலவிடப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.