Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 7, 2016

ராமநாதபுரத்தில் பாதிரியாரின் காம வேட்டை: 30 ...



ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிரியார் ஒருவர் பெண்கள் பலரை பாலியல் பலாத்காரம் செய்து வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது. பாதிரியாரை கைது செய்த காவல்துறையினர் அவரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையை சேர்ந்தவர் மிலன்சிங் இவர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூரில் பாதிரியாராக இருந்து வந்துள்ளார்.

இவர் சில மாதங்களுக்கு முன்னர் காந்திமதி என்ற பெண்ணிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி நகை பணங்களை வாங்கி ஏமாற்றியுள்ளார்.   பின்னர் ஒரு நாள் காந்திமதியை போனில் தொடர்புகொண்டு சங்கரன்கோவிலில் வேலை ஏற்பாடு செய்திருப்பதாக கூறி காரில் அழைத்துக்கொண்டு போய் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.   இதனையடுத்து காந்திமதி காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அவர் இதேப்போல் 30-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்ததையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.