Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 13, 2016

சிறுமி பலாத்காரம் 2 வாலிபர்கள் கைது


ஓசூர் அருகே 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டி பகுதியில், வடமாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் தசரா பண்டிகையை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையில் கலந்துகொள்ள சிறுமி கோயிலுக்கு சென்றாள்.

செல்லும்வழியில், அதே பகுதியைச் சேர்ந்த வடமாநில வாலிபர்கள் சரத்குமார் (21), மணிக்குமார் (30) ஆகிய 2 பேரும், சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு வாலிபர் சரத்குமாரின் தாய் பிரியா (40) உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சகாயமேரி, சிறுமியை பலாத்காரம் செய்த சரத்குமார், மணிக்குமார் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த சரத்குமாரின் தாய் பிரியா ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.