October 6, 2016
ஆண்டவனே..உன் பாதங்களை..நான்…!! 1984 அக்டோபர் 10…சரித்திரம் திரும்புகிறது…!!
1984..அக்டோபர் 5 ..அப்போதைய முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் முதன் முறையாக உடல் நலம் பாதிக்க பட்டது. லேசான காய்ச்சல் என்று கூறி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சர்கள் யாருக்குமே தெரியாமல் ஜானகி அம்மையார் கொண்டு போய் அட்மிட் பண்ணினார்கள்.
அன்று மாலை வரை யாருக்கும் தெரியாது.பின் மெல்ல விஷயம், கசிந்து அமைச்சர்கள் அலறி அடித்த படி ஓடினார்கள்..
இரண்டு நாட்கள் கழித்து ஆஸ்துமா அலர்ஜி என்றார்கள்..இப்படியே நகர்த்தி அக்டோபர் இருபதாம் தேதிதான் தலைவருக்கு இரண்டு சிறுநீரகமும் பதித்து விட்டது என்று மருத்துவமனை வட்டாரம் தெளிவான அறிக்கை கொடுத்தது.
ஆனால் அதற்குள் தமிழ் நாடே அல்லோகலப்பட்டது. எம்ஜிஆரின் பக்தர்கள் அலறினார்கள், கதறினார்கள், காவடி எடுத்தல் தீ மிதித்தல்,அலகு குத்துதல், தெருக்களில் அங்கபிரதட்சணம் செய்வது என ரணகளப் பட்டது.
எம்ஜிஆர், எம்ஜிஆர், எம்ஜிஆர் தான் எங்கும்…! எம்ஜிஆர் அமெரிக்கா கொண்டு செல்லப் பட்டார்..
இப்போது சரித்திரம் திரும்புகிறது. அதே சூழலில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கபட்டு அதே அப்போலோவில் அனுமதிக்கப் பட்டிருக்க, முதல்வரின் பக்தர்கள் காவடி எடுப்பது அலகு குத்துவது, தீ மிதிப்பது, தீ குளிப்பது என ஒரு வழி பண்ணுகிறார்கள்…
புரட்சித்தலைவர் போலவே புரட்சித் தலைவியும் மீண்டு வந்து விட்டால் நல்லதே…!!
ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டினேன்..இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இங்கு உன்னிடம் கையேந்தினேன் …!!
எம்ஜிஆருக்கு ஒலித்த அதே பாடல்…!!!
ஆண்டவனே..உன் பாதங்களை..நான்…!! 1984 அக்டோபர் 10…சரித்திரம் திரும்புகிறது…!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 06, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 06, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.