October 25, 2016
ஒடிஸா-ஆந்திர மாநில எல்லையில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை!
ஒடிஸா-ஆந்திர மாநில எல்லையில் இரு மாநில போலீசார் இன்று அதிகாலை நடத்திய தேடுதல் வேட்டையின்போது 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒடிஸா மாநில மல்கான்கிரி மாவட்டத்தில் ஜான்ட்ரி பகுதியில் ஆந்திரா-ஒடிஸா மாநில போலீசார் இன்று அதிகாலை நடத்திய தேடுதல் வேட்டையின்போது, கடும் துப்பாக்கிசண்டை நடந்தது.
இதில், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்ததாக ஒடிஸா போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில போலீஸ் உயரதிகாரி, இத்தாக்குதல் சம்பவத்தில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்க முக்கிய நபர்கள் உயிரழந்திருக்கலாம் என்றும், இதுபற்றி உண்மை நிலவரம் பின்னரே உறுதி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இரு மாநில போலீசாரும் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர் கூறினார்.
ஒடிஸா-ஆந்திர மாநில எல்லையில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.