Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 8, 2016

வருமான வரி அதிகாரியாக வந்த திருடர்கள்..! 15‌0 பவுன், ரூ.40 லட்ச‌ம் கொள்ளை



கோவையில் வருமான வரித் துறை அதிகாரிகள் போல் நடித்து பஞ்சு வியாபாரி ‌வீட்டில் 150 ச‌வரன் நகைகளையும் 40 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் சிலர் கொள்ளையடித்துச் சென்றனர்.
சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ‌பஞ்சு வியாபாரி பஷீர் தனது வீட்டில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் செய்துள்ளார்.
வருமான வரித் துறை அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு 12 பேர் கொண்ட கும்பல் தனது வீட்டிற்குள் நுழைந்து சோதனையிட்டதாகவும் பீரோவி‌ல் இருந்த பணத்தையும் நகையையும் ‌அவர்கள் எடுத்துக்கொண்டதாகவும் பஷீர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் தன்னையும் வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்றதாகவும‌ கோவையின் புறநகர் பகுதியான நீலாம்பூரில் ‌தம்மை இறக்கிவிட்டு சென்றுவிட்டதாகவும் பஷீர் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.