October 9, 2016
பங்களாதேஷில் 13 வயது சிறுவன் கொடூரமாக கொலை: போராட்டத்தில் பொதுமக்கள்
பங்களாதேஷில் 13 வயது சிறுவனை கட்டிவைத்து இரும்புக் கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்த கணொளி இணையத்தில் பரவியதையடுத்து, அங்குள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பங்களாதேஷ் சில்ஹெட் நகர் அருகே உள்ள குமாரகாவ்னில் 13 வயதுடைய சமியுல் ஆலம் ரஜோன் என்ற சிறுவனே இவ்வாறு கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப வறுமையின் காரணமாக தெருவில் காய்கறி விற்றுவந்த இச் சிறுவனை அங்குள்ள ரிக்க்ஷாவை திருட முயன்றதாகக் கூறி சிலர் அந்த சிறுவனைப் பிடித்து கட்டிவைத்து இரும்புக் கம்பியால் அவனை அடித்துள்ளனர்.
இதில் வலி தாங்க முடியாத சிறுவன் தன்னை விட்டுவிடுமாறு அலறியுள்ளான், மேலும் தாகம் மிகுதியால் தண்ணீர் தருமாறு கேட்டுள்ளான். ஆனால், இவர்கள் மனிதர்கள் அச்சிறுவனை அடித்துக்கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தை அந்த கும்பலை சேர்ந்த நபர் தனது கைப்பேசியில் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவைப் பார்த்த பலர் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு கொலையாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த பொலிஸார் 3 பேரை கைது செய்துள்ளதோடு, முக்கிய குற்றவாளி சம்பவம் நடந்த பிறகு சவுதி அரேபியாவுக்கு தப்பியோடிவிட்டதையடுத்து, அவர் அங்கு கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, சிறுவனின் உடல் சில்ஹெட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுவனின் உடலில் 60க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் 13 வயது சிறுவன் கொடூரமாக கொலை: போராட்டத்தில் பொதுமக்கள்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 09, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 09, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.