Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 2, 2016

13 நாட்களுக்கு பின் நடந்த ராம்குமாரின் போஸ்ட்மார்ட்டம்.



சுவாதி கொலையில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ராம்குமார் புழல் சிறையில் மின்சாரம் தாக்கி தற்கொலை செய்த நிலையில் அவருடைய உடல் 13 நாட்களுக்கு பின் இன்று சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர் குப்தா தலைமையில் இரண்டரை மணி நேரம் இந்த பரிசோதனை நடைபெற்றது.
மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி முன்னிலையில், 4 அரசு மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர் சுதீர் கே.குப்தா கொண்ட குழு ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்தது. 
மதியம் 1.30 மணிக்கு பிரேத பரிசோதனை முடிவடைந்தது. பிரேத பரிசோதனை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பிணவறையின் முன்பு சோகத்தில் ராம்குமாரின் பெற்றோர், மற்றும் உறவினர்கள், வழக்கறிஞர்கள் நின்றனர். இந்த நிகழ்வால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.