October 7, 2016
சுற்றுலா சென்ற போது 10 மாணவர்களை கேரளாவில் பாதி வழியில் இறக்கி விட்ட தலைமை ஆசிரியர்!
கேரளாவிற்கு கல்வி சுற்றுலா சென்ற பத்து மாணவர்களை பாதிவழியில் இறக்கி விட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்த்தாண்டத்தில் பெற்றோர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும், 43 மாணவர்களை, கேரளாவிற்கு கல்வி சுற்றுலாவிற்கு ஆசிரியர்கள் அழைத்து சென்று உள்ளனர்.
இதில் பத்து மாணவர்கள் மது அருந்திவிட்டு வந்ததாக கூறி அவர்களை தலைமை ஆசிரியர், பாதி வழியிலேயே இறக்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட பெற்றோருக்கு மாணவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அரசு பள்ளியை, முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பெற்றோரிடம் குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரி மோகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது இன்று மாலைக்குள் மாணவர்களை மீட்டு வீடுகளுக்கு அனுப்புவதாக கூறியதை தொடர்ந்து பெற்றோர் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றுலா சென்ற போது 10 மாணவர்களை கேரளாவில் பாதி வழியில் இறக்கி விட்ட தலைமை ஆசிரியர்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 07, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.