"ஜல்லிக்கட்டு பிரச்னையில் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அது நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டது போன்ற சிக்கல், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக உள்ளது," என பி.ஜே.பி. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
வரும் 10-ம் தேதி 60-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் பி.ஜே.பி. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இதையொட்டி, திருக்கடையூர் அபிராமி உடனுறையும் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜையில் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார் ஹெச்.ராஜா.
முன்னதாக நம்மிடம் பேசிய ஹெச்.ராஜா, "தமிழகத்துக்கு துரோகம் செய்யும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசு முட்டுக்கட்டை போடுவதாக சொல்வதில் உண்மையில்லை. ஜல்லிக்கட்டு பிரச்னையில் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அது நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டது. இன்றுவரை சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. அதுபோன்ற நிலை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக உள்ளது. எனவே, வலுவான, பாதுகாப்பான, சட்டரீதியான காவிரி மேலாண்மை வாரியத்தை வரும் 18-ம் தேதிக்கு பின்னர் மத்திய அரசு அமைக்கும்.
இந்த விஷயத்தில் 1974-ம் ஆண்டு அப்போதிருந்த தி.மு.க. அரசு காவிரி நதி நீர் உடன்பாட்டை புதுப்பிக்கத் தவறியதுதான் காவிரி பிரச்னைக்கு அடிப்படை காரணம். இந்த துரோகத்துக்கு தி.மு.க.வும், காங்கிரசும்தான் பொறுப்பு. ஆனால், இதை மறைத்துவிட்டு ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது நாடகம். இதில் விவசாயிகள் கலந்துகொள்ளக் கூடாது. தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்” என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.