இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஒருங்கிணைப்பில் இருக்கும் ஐந்து வங்கிகளின் சார்பில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ.342.75 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் , ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி ரயிலில் கொண்டு வரப்பட்டது. சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு மொத்த கரன்சிகளும் கொண்டு வரப்பட்டது.
இந்தப் பணம் 226 மரப்பெட்டிகளில் அடைத்து,‘சீல்’ வைக்கப்பட்டு, ரயிலின் பார்சல் பெட்டியில் எடுத்துவரப் பட்டது. ஆனாலும் மரப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த மேற்கூரையை வெட்டி உடைத்து உள்ளே இருந்த பணத்தில் ரூ.5.78 கோடி ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரயில்வே பாதுகாப்பு படையும், இருப்புப்பாதை ரயில்வே போலீசாரும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் கொள்ளையர்களைப் பிடிக்க முடியவில்லை. வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சரியாக ஒருமாத இடைவெளியில் அதேபோன்று மீண்டும் பெருந்தொகை ஒன்று ரயிலில் (4/10/2016) அன்று 7.50 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டது. மறுநாள் காலை 8-30 முதல் 9 மணிக்குள் அந்த "பண" ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது. 227 கோடியே 11 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் இந்த ரயிலில் கொண்டு வரப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 7 வங்கிகளில் இருந்து பெறப்பட்ட இந்தப் பணம், பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆயுதப்படை போலீஸ் டிஎஸ்பி ஒருவர், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டர் , 10 போலீசார் ஆயுதங்களுடன் ஒருபக்கம் உள்ளனர். ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் ஒருவர், நான்கு போலீசார் ஆயுதங்களுடன் இருக்க... இது மட்டுமல்லாது ஒரு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டருடன் நான்கு போலீசார் துப்பாக்கியுடன் ரயிலில் வருகிற பழைய பணத்துக்கு பாதுகாப்பாக வந்தனர். கனரா., கேவிபி, எஸ்பிஐ, டிஎம்பி, ஐஓபி உள்ளிட்ட ஏழு வங்கிகளின் பழைய பணத்துக்கு தற்போது அளித்த பாதுகாப்பை அன்றும் அளித்திருந்தால், 5.78 கோடி ரூபாய் பணத்தை இழக்காமல் இருந்திருக்கலாம்...
பழைய சம்பவத்தின் சிறு ட்ரெயிலர் : சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் மேற்கூரையை வெட்டி உடைத்து, 5.72 கோடி ரூபாய் கொள்ளை நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில்வே பாதுகாப்புப் படை, இருப்புப்பாதை ரயில்வே போலீசார் இணைந்து விசாரணை நடத்தினர். ஆனால் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை. வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.... விசாரணை போய்க் கொண்டே இருக்கிறது. அடுத்த ரயிலும் வந்து விட்டது!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.