Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 15, 2016

'கர்நாடக கலவரம் கட்டுக்குள் வந்தது இப்படித்தான்!' போலீஸ் ஆபரேசனை விவரிக்கும் அதிகாரி


காவிரிக்காக நடந்த கலவரத்தில் கர்நாடகா, தமிழகம் ஆகிய இருமாநிலங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி சூட்டில் இரண்டு உயிர்பலிகள், கோடிக்கணக்கில் சேதம் என பாதிப்புகளுக்கு மத்தியில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் வந்துள்ளது.

கர்நாடகா- தமிழக எல்லைப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதோடு, முற்றிலும் இருமாநில போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் எந்தவித சேதமும், பாதிப்பும் இல்லை என்கிறார் பெங்களூரு கிழக்கு மண்டல கூடுதல் கமிஷனர் ஹரிசேகரன்.

இதுதொடர்பாக அவர், அளித்த சிறப்பு பேட்டி:

கர்நாடகாவின் தற்போதைய நிலைமை எப்படி இருக்கிறது?

கலவரத்துக்குப் பிறகு இன்று (14.9.2016) இயல்பு நிலைமை திரும்பி கொண்டு இருக்கிறது. 144 தடை உத்தரவுகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழக-கர்நாடக போக்குவரத்து சேவை தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்.

கலவரம் நடந்த போது அதை தடுக்க எந்தமாதிரியான வியூகங்கள் அமைத்தீர்கள்?

குடிசைபகுதி மற்றும் அதையொட்டிய இடங்களில் அதிகமான தமிழர்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில்தான் 50 முதல் 60 சதவிகிதம் குற்றச் செயல்கள் நடப்பதுண்டு. அதைத் தடுக்க பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் கூடுதல் கமிஷனராக பொறுப்பேற்றவுடன், 'ஆபரேசன் ஏரியா டாமினேசன்' என்ற ஆபரேசனை கடந்த ஒரு ஆண்டாக செயல்படுத்தினேன். இதில் 10 ஆண்டுகளாக குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களை கண்காணித்து தற்போது குற்றச்செயல்களில் ஈடுபடாதவர்களை தவிர்த்து மற்றவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். இதன் மூலமே கலவரம் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்க முடிந்தது.

கலவரத்தின் மூன்று நாட்கள் எப்படி இருந்தது?

ஏற்கனவே நான் 7 வருடங்களாக ஆபரேசன் டூயூட்டியில் இருந்திருக்கிறேன். கடந்த 1999, 2000 ஆகிய ஆண்டுகளில் வீரப்பன் ஆபரேசனில் இருந்தேன். அடுத்து நக்சல் ஆபரேசனில் பணியாற்றியதால் இந்த கலவர சம்பவத்தை எளிதில் சமாளிக்க முடிந்தது. மூன்று நாட்களும் நான் உள்பட எந்த போலீசும் தூங்காமல் மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தோம்.



தமிழர்களின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது? 

பெங்களூரு கிழக்கு மண்டலத்தில்தான் 80 சதவிகித தமிழர்கள் இருக்கிறார்கள். நான் தமிழகத்தை சேர்ந்தவன் என்பதால் என்னிடம் அவர்கள் குறித்த அனைத்து விவரங்களும் தெரியும். இதனால் அவர்கள் மூலம் எனக்கு முழு ஒத்துழைப்பு கிடைத்தது. மேலும் வதந்தியாக பரவும் தகவல்கள் கூட எனக்கு 24 மணி நேரத்துக்கு முன்பே தெரிந்து விடும். தமிழர்களைப் போல கர்நாடக அரசும், அரசியல்வாதிகளும், மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நான் எடுக்கும் முடிவுக்கு அவர்கள் முழு ஆதரவு கொடுத்தார்கள். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.