சென்னை தியாகராஜ நகரில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில், அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடிகர் விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.அதில், காவிரி பிரச்னைக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்போவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்றுத் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா, எந்த முடிவு எடுத்தாலும், அதற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்றும் சங்கத்தின் தலைவர் நாசரும், பொதுச்செயலாளர் விஷாலும் கூட்டாக அறிவித்தனர்.
காவிரி விவகாரத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒரு பெண் என்றும் பாராமல், முதலமைச்சர் என்றும் பாராமல், அநாகரிகமான முறையில் உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்களைத் தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் நாசர் தெரிவித்தார்.
முக்கியமாக, காவிரி பிரச்னையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்போவதில்லை என்று சங்கத் தலைவர் நாசர் திட்டவட்டமாக தெரிவித்தார். மாறாக, கர்நாடகாவிற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடகா நடிகர் நடிகைகளுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
"தமிழர்களுக்கு எதிராக எது நடந்தாலும், நடிகர் சங்கம் எப்போதும் அமைதியாகவே இருக்கிறதே.. ஏன்" என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், "நடிகர் சங்கம் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த சினிமா சங்கங்களையும் ஒன்றிணைத்து, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக, எங்களின் போராட்டம் இருக்கும்" என்றும் நாசர் பதில் அளித்தார்.
காவிரியில் இருந்து தமிகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளகதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 9ம் தேதி, கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாகக் கர்நாடக நடிகர், நடிகைகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோல், வருகிற 16ம் தேதி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் நடைபெற உள்ள விவசாயிகளின் முற்றுகை போராட்டத்தில் தமிழ் திரைப்பட நடிகர் நடிகைகள் பங்கேற்க வேண்டும் என்று, தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் நியாயம் குறித்து முகநூலில் கருத்து தெரிவித்த தமிழக இளைஞரை பெங்களூரில் இருக்கும் சில கன்னட அமைப்பினர் தாக்கியதாக வீடியோ காட்சிகள் வெளியாகியது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இன்று மாலை சென்னை தியாகராஜ நகரில் தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் அவசரமாகச் செயற்குழு கூட்டத்தை கூட்டியதால், காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக போராட்டம் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால்,காவிரி பிரச்னைக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்போவதில்லை என்று முடிவு எடுத்து இருக்கிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.