காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரரின் 10 வயது மகன் ராணுவத்தில் சேர்ந்து தீவிரவாதிகளை வேரறுப்பேன் என சபதமிட்டுள்ளான்.
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தின் உரி நகரில் இந்திய ராணுவ முகாம் செயல்பட்டு வந்தது. இந்த முகாமில் நேற்று முன்தினம் அதிகாலையில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் நுழைந்த பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் அமைத்திருந்த கூடாரங்கள் மீது தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டுகளை வீசியதுடன் துப்பாக்கி சூடும் நடத்தினர். ராணுவத்தினரும் திருப்பித் தாக்கினர். இதில், 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். வெடிகுண்டு வீசியதில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 25 ராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளனர்.
சமீப காலத்தில் இந்திய ராணுவம் மீது தீவிரவாதிகள் நடத்திய மிகப் பெரியத் தாக்குலாக இது கருதப்படுகிறது. உலகின் மிகப் பெரிய தரைப்படை, நான்காவது மிகப் பெரிய கப்பற்படை, தலைசிறந்த விமானப்படை என இந்திய ராணுவம் பெயரைப் பெற்றிருக்கும் நிலையில், தீவிரவாதிகள் நமது எல்லைக்குள் புகுந்து தொடர்ந்து தாக்குவதும் ராணுவ வீரர்கள் உயிரிழப்பதும் நாட்டு மக்களை கோபப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வெடிகுண்டுகள் பாகிஸ்தான் தயாரிப்பு எனத் தெரிய வந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிகிறது.
இந்த தாக்குதலயைடுத்து தீவிரவாதிகளை வேரறுக்க வேண்டும் என்பதில் இந்திய ராணுவம் உறுதியாக உள்ளது. அதற்காக எல்லைத் தாண்டி சென்று தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் தரப்பில் மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் நிலைகள், பதுங்குகுழிகள் மீது தாக்கவும் அனுமதி கோரப்பட்டுள்ளது. தொலைதூர தாக்குதலுக்கு ‘ஸ்மெர்ச்’ ஏவுகணைகள் அல்லது பிரமோஸ் ஏவுகணைகளை பயன்படுத்துவது எனவும் வான்வழித் தாக்குதலுக்கு மிராஜ்–2000, ஜாகுவார், சுகோய் விமானங்கள் பயன்படுத்தவும் ராணுவம் முடிவெடுத்துள்ளது. கொத்துக் குண்டுகள் அல்லது லேசர் குண்டுகள் தீவிரவாதிகள் மீது வீசப்படலாம்.

ராணுவத்தின் கோரிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பின், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி சந்தித்துள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை தண்டித்தே தீர வேண்டும் என பிரதமர் மோடி உறுதியளித்தாகவும் தெரிகிறது.
தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியான 20 ராணுவ வீரர்களில் ஹவில்தார் ரவிபால் சலோத்ராவும் ஒருவர். இவர் கடந்த 23 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். ரவிபாலின் இரு சகோதரர்களும் கூட ராணுவத்தில்தான் பணியாற்றுகின்றனர். ரவிபாலின் மூத்த சகோதரர் ஜோகிந்தர்லால் தனது சகோதரர் குறித்து கூறுகையில்,'' எனது மூன்று சகோதரர்களும் ராணுவத்தில்தான் இருக்கின்றனர். அதில் ரவிபால்தான் இளையவன். ராணுவத்தில் இருக்கும் போதுதான் சீரியசாக இருப்பான். ஊருக்கு வந்துவிட்டால் அனைவருடனும் சகஜமாக பழகுவான். ராணுவக் கதைகளை சொல்லுவான். இப்போது தீவிரவாதிகள் தாக்குதலுக்கு அவன் பலியாகி விட்டதால், எங்கள் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது'' என்கிறார் வேதனையுடன்.
தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியான ரவி பாலுக்கு கீதா ராணி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உண்டு. இவரது 10 வயது மகன் வினேசுக்கு தந்தை தாய்நாட்டுக்காக உயிரிழந்துள்ளார் என்பது தெரிகிறது. தற்போது 6ம் வகுப்பு படிக்கும் வினேஷ், தந்தையின் உடல் அடக்கத்தின் போது, தனது கைகளில் இரு சிறிய பிளாஸ்டிக் தேசியக் கொடியை பிடித்துக் கொண்டு ஆங்கில இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறான். அப்போது, '' எனது தந்தை நாட்டுக்காக உயிரிழந்துள்ளார் என்பது எனக்குத் தெரியும். தினமும் என்னிடம் பேசுவார். படிப்பில் கவனம் செலுத்தச் சொல்வார். எனது தந்தைக்கு நானும் எனது தம்பியும் ராணுவ டாக்டராக வேண்டும் என்பதுதான் கனவு. அவரது கனவை நான் நிறைவேற்றுவேன். '' என கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியான ரவிபாலின் சொந்த ஊரான சர்வா கிராமத்தில் 120 குடும்பங்கள் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒருவரோ இருவரோ ராணுவத்தில் பணியாற்றுகின்றனர். உயிர் இருந்தால் ராணுவத்திலும் உயிர் துறந்தால் நாட்டுக்காக துறப்பதும் சர்வா கிராமத்தினரின் வழக்கம்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.