Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 6, 2016

புகார் எதிரொலி ஆக்கிரமிப்புகளை இடிக்க தொடங்கியது எஸ்.ஆர்.எம்.!


காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமாக சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இது தொடர்பாக கல்வி கொள்கைக்கு எதிரான மக்கள் இயக்கம், ஆர்.டி.யை மூலம் சில தகவல்களைப் பெற்றுக்கொண்டது. இதனையடுத்து, பொத்தேரி ஏரி, பாசன கால்வாயை எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் தரப்பில் ஆக்கிரமித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக புகார் எழுந்தது. இது பற்றி விரிவான விவரங்கள், முதல்வர் ஜெயலலிதாவிற்கு அனுப்பட்டதாம். அதனைப் பார்த்த அவர், டென்ஷன் ஆகிவிட்டாராம். இதனையடுத்து சம்மந்தபட்டப அதிகாரிகளை அழைத்து, டோஸ் விட்டாராம். அதனைத் தொடர்ந்து, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அதிரடியாக அரசே இடிக்கப்போவதாகத் தகவல் பரவியது.

இந்நிலையில், அரசு அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக, இன்று எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக தரப்பினர், அவசர அவசரமாக ஒரு காரியம் செய்தனர். அவர்கள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களை அவசரகதியில் இடித்து வருகிறார்கள். இதில் முதல் கட்டமாகச் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டியும், எஸ்.ஆர்.எம். வளாகத்தின் முன் பக்கம் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. இதுபோல், இன்னும் பல கட்டிடங்கள் அடுத்தடுத்து இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை படம் எடுக்கச் சென்ற ஜுனியர் விகடன் நிருபர் ஜெயவேலை பல்கலைக்கழக ஆட்கள், சிறைப்பிடித்துள்ளனர். மேலும், அவரிடமிருந்து கேமராவை பிடுங்கி படங்களையும் அழித்து  வருகிறார்கள். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.