அறிவியலின் வளர்ச்சி நாளுக்கு நாள் உயரமாக போய்க்கொண்டே இருக்கிறது. அறிவியலின் அடுத்தகட்டமாக, செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது. மெக்ஸிகோவில் 27-ம் தேதி நடைபெற்ற "சர்வதேச ஆஸ்ட்ரானாட்டிகல் காங்கிரஸ்"-ல் பேசிய ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிறுவனர், எலான் மஸ்க் "2022-ம் ஆண்டில், செவ்வாய் கிரகத்தில் குடியிருப்புகள் அமைக்க இருக்கிறோம். அதற்கு 2,00,000 டாலர் வரை டிக்கெட் விலை இருக்கும்" என அறிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், செவ்வாய் கிரக குடியேற்ற திட்டத்தில், மறுசுழற்சி செய்யும் சோலார் போன்ற மாற்று எரிபொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்ட விண்வெளி வாகனத்தில், 100 பேருடன் செவ்வாய்க்கு மக்களை அனுப்பும் திட்டம் இருக்கிறது.
தன்னுடைய நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் செவ்வாய்க்கும், பூமிக்கும் என இரண்டு கிரகங்களுக்கிடையிலான அமைப்பில் செல்ல இரண்டு அடிப்படை வழிகள் உள்ளன. விருப்பமிருந்தால் பூமிக்கு திரும்பியும் வரலாம் அல்லது வேறு கிரகத்திற்கு சென்று வேற்று கிரக உயிராகவும் வாழலாம். அடுத்த நூறு ஆண்டுகளில் செவ்வாய்க்கு ஒருமில்லியன் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
இதனுடைய முதல்கட்ட துவக்கமாக 2022-ம் ஆண்டில் மனிதர்களை செவ்வாய்க்கு அழைத்துச்செல்ல இருக்கிறோம். அவ்வாறு அழைத்துச் செல்லப்படும் முதல் விண்கலத்திற்கு 'ஹார்ட் ஆஃப் கோல்டு' என்று பெயரிட்டுள்ளோம். அந்த பயணத்திற்கு பின்னர், அந்த முதல் விண்கலம் 'டக்ளஸ் ஆடம்ஸ்' புத்தகத்தில் இடம்பெறும். அந்த விண்கலமானது ஒரே நேரத்தில் 100 பயணிகளை ஏற்றிக்கொண்டு இலக்கை அடைய 80 நாட்களை எடுத்துக்கொள்ளும். சுவாரசியமான 80 நாள் பயணத்தில் திரைப்படங்கள், ஜீரோ கிராவிட்டி விளையாட்டுக்கள், கருத்துப்பறிமாற்றம் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக அமையும்.
முதல் பயணத்திற்கு பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செவ்வாய்கோளானது பூமிக்கு அருகில் வரும்போது மட்டுமே இந்த பயணம் ஏற்பாடு செய்யப்படும். செவ்வாய்க்கு செல்லும் நபரின் டிக்கெட் செலவானது $2,00,000 டாலராகவும், பயணம் இறுதியாகும்போது $ 1,40,000 டாலராகவும், அதற்கும் கீழ் $ 1,00,000 டாலராகவும் இருக்கக்கூடும். பூமிக்கு திரும்பும்போது மட்டும் இந்த ஆஃபரை வழங்க ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. செவ்வாயிலிருந்து பூமிக்குத்திரும்ப டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு கட்டணம் இலவசம்" என்றவர், செவ்வாய்க்கு செல்லும் விண்கலத்தின் செயல்பாடுகளை பற்றி விளக்கினார்.
அதில் "இந்த போக்குவரத்தில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய எரிபொருட்களான மீத்தேன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய வாயுக்கள் எப்போதும் நிரப்பட்ட நிலையிலேயே இருக்கும். மேலும் இந்த அமைப்பானது விண்வெளியில் உள்ள தண்ணீர் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடை பயன்படுத்தி எரிபொருளாக மாற்றும் வகையிலும் வடிவமைக்க உதவுகிறது. அந்த எரிபொருள், பூமி திரும்பும்போது வாகனத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இதன் செயல்பாடு இருக்கும்".

ஆனால், இதே எலான் மஸ்க் 2012-ம் ஆண்டு, லண்டனில் உள்ள ராயல் ஏரோநாட்டிக்கல் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, செவ்வாய் கிரகத்தில் சூரிய ஒளி தாக்காத வகையில் குடியிருப்புகளை ஏற்படுத்துதல், பிராணவாயுவை செயற்கையாக உருவாக்கும் கருவிகளை நிறுவுதல், உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளை தேடிக்கண்டறிந்து குடிநீராகப் பயன்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட பணிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டியதிருக்கும். செவ்வாய் மண்ணில் பயிர் சாகுபடி செய்வதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்படும். அங்கு குடியேறுவோர், சுயசார்புள்ள புதிய நாகரிகத்தை உருவாக்குவார்கள். அடுத்த 20 ஆண்டுகளுக்குள் செவ்வாயில் 80 ஆயிரம் பேரை குடியேற்றத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.