Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 2, 2016

சாம்சங் கேலக்ஸி நோட் 7 தாமதத்துக்கு என்ன காரணம்?


உலகம் முழுவதும் சாம்சங் நிறுவனம் விற்ற, தனது கேலக்ஸி நோட் 7 போனை மீண்டும் திரும்ப ரீ-கால் செய்துள்ளது. பெரும் வரவேற்பை பெற்றிருந்த இந்த நோட் 7, கொரியாவில் மட்டுமே 4 லட்சம் போன்களை விற்பனை ஆகியிருந்தது. இந்தியாவிலும் பல பேர் இதற்காக, ப்ரீ-ஆர்டர் செய்திருந்த நிலையில், "கேலக்ஸி நோட் 7-க்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி.எங்களால் குறித்த நேரத்தில் போனை டெலிவரி செய்ய முடியவில்லை. அதற்காக வருந்துகிறோம். ஆனால் விரைவில் உங்களுக்கு டெலிவரி செய்ய முயற்சிக்கிறோம்" என செய்தி அனுப்பியுள்ளது சாம்சங் இந்தியா.

இந்த பிரச்னைகளுக்கு காரணம், கடந்த சில நாட்களாக பல இடங்களில் கேலக்ஸி நோட் 7-ன் பேட்டரிகள் வெடித்ததாக வந்த புகார்கள்தான். பல வாடிக்கையாளர்கள் தனது நோட் 7, சார்ஜ் செய்யும் போதோ, அல்லது சார்ஜ் ஏற்றியதற்கு பிறகோ, வெடித்துவிட்டதாக புகார்களை சாம்சங்கிற்கு தட்டிவிட்டனர். அத்துடன், போன் வெடித்த வீடியோவை ஒருவர் வீடியோவாக யூ-டியூபில் எடுத்துப் போட, வைரல் ஆனது சிக்கல். அடுத்த வாரம் ஐ-போன் 7 வரவிருப்பதால், அதற்கு முன்பாகவே நோட் 7 விற்பனையைத் துவங்க சாம்சங் திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்த பேட்டரி பிரச்னை திடீர் சிக்கலை உண்டு பண்ண, இதுவரை விற்ற போன்களை திரும்ப அழைத்துள்ளது. உலகளவில் மொத்தம் 35 புகார்கள் இது தொடர்பாக சாம்சங் நிறுவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட போன்களை கொடுத்துவிட்டு, வேறு போன்களை வாங்கிக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.



இதனையடுத்து, "சாம்சங் வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு கருத்துமே எங்கள் முக்கியம். தரமான பொருட்களை விற்பனை செய்வதே சாம்சங் நிறுவனத்தின் நோக்கம். இந்த பேட்டரி பிரச்னை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும். எங்களுக்கு வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். எனவே கேலக்ஸி நோட் 7 போன்களின் விற்பனையை தற்போது நிறுத்துகிறோம். ஏற்கனவே போன் வாங்கியவர்கள் அதனை மாற்றிக் கொள்ளலாம். உங்களுக்குத் தரமான சேவையை வழங்குவதற்கு முயற்சிக்கிறோம்" எனக் கூறியுள்ளது சாம்சங் நிறுவனம்.

 இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன்,  59,900 ரூபாய்க்கு விற்பனைக்கு வரவிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.