கர்நாடகாவில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு கவலை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, காவிரி விவகாரத்தில் தமிழக, கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவில் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. தற்போது, இந்த போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ளது. பெங்களூருவில் நேற்று முன்தினம் தமிழக இளைஞர் ஒருவர் கன்னட அமைப்பினரால் கடுமையாக தாக்கப்பட்டார். பதிலுக்கு ராமேஸ்வரத்தில் கன்னட பிரமுகர் ஒருவர் தாக்கப்பட்டார்.
இதன் உச்சகட்டமாக பெங்களூருவில் நேற்று தமிழகத்துக்கு சொந்தமான தனியார் பேருந்துகள் 50க்கு மேற்பட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கர்நாடகாவில் இருக்கும் தமிழர்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வன்முறை பரவாமல் இருக்க தமிழக- கர்நாடக எல்லையில் அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, காவிரி விவகாரத்தில் தமிழக, கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகாவில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு கவலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பொறுப்புகளை மனதில் வைத்துக் கொண்டு இருமாநில மக்களும் செயல்பட வேண்டும் என்றும், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், நாட்டின் நலனே முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.