Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 15, 2016

ரியோ பாராலிம்பிக்ஸ்: ஒலிம்பிக் வீரரை மிஞ்சிய பாராலிம்பிக் வீரர்கள்!


ஒலிம்பிக் போட்டிகள் ரியோவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த கையோடு பாராலிம்பிக்ஸ் போட்டிகள் ரியோவில் துவங்கின. இதில் நேற்று  பார்வையற்றோர்கான டி13 1500மீ ஒட்டப்பந்தையம் நடைபெற்றது. இதில் நிகழ்த்தப்பட்ட சாதனை உலகையே தரும்பி பார்க்க வைத்துள்ளது.

அல்ஜீரியாவின் போவுட் பகா பந்தய தூரத்தை 3 நிமிடம் 49.84 நொடிகளில் கடந்தார். இது ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவர் ஓடிய நேரத்தை விட குறைவான நேரமாகும். ஒருவேளை இவர் ஒலிம்பிக்கில் ஓடி இருந்தால் இவருக்கே தங்கம் கிடைத்திருக்கும். ஏனேனில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமேரிக்காவின் மத்தியு சென்ட்ரொவிட்ஸ்-ஏ 1500மீ தூரத்தை கடக்க 3 நிமிடம் 50 நொடிகள் எடுத்துக்கொண்டார். ஆனால் பாராலிம்பிக்ஸில்போ இவருக்கு கிடைத்தது நான்காவது இடமே. இவர் பந்தய தூரத்தை கடந்த நேரம் இவருடன் போட்டி போட்ட மூவரை விட குறைவு. ஆம், ஒலிம்பிக் வீரரை மிஞ்சியது இவர் மட்டும் அல்ல, இவருடன் சேர்ந்து நால்வர்.

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு டி11, டி12, டி13 என்ற மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். அதில் டி13 பிரிவில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பார்வைகுறைபாட்டின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். இவர்களுகான டி13 1500மீ ஒட்டபந்தையம் ரியோவின் மரக்கானா மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியின் முடிவுகள் மரக்கானா மைதானத்தையே பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. முதலில் வந்த நான்கு பேர் பந்தய தூரத்தை கடந்த நேரம் ஒலிம்பிக் வீரர் இதே பந்தய தூரத்தை கடந்த நேரத்தைவிட குறைவு. இந்த போட்டியில் கென்யாவை செர்ந்த ஹென்ரி கிர்வா 3 நிமிடம் 49.59 நொடிகளுடன் வென்கலம் வென்றார். எத்தியோபியாவை செர்ந்த டமிரு டிமிஸ் 3 நிமிடம் 48.59 நொடிகள் என்ற நேரத்தில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வேன்றார். இந்த போட்டியில் அல்ஜீரியாவை சேர்ந்த முன் கூறிய போவுட் பகாவின் சகோதரருமான அப்டெல்லடிப் பகா தங்கம் வென்றார். இவர் பந்தய தூரத்தை 3 நிமிடம் 48.29 நொடிகளில் கடந்தார்.

இந்த போட்டியில் தங்கம் வென்ற பகா கூறியது,” தங்கம் வெல்லவது ஒரு எளிதான செயல் அல்ல. நான் இதற்காக இரண்டு வருடம் அயராது உழைத்தேன். இது எனக்கு மிக, மிக கடினமாக இருந்தது.” என்று கூறினார்.

மாற்றுத்திறன்கள் இருப்பது எதோ ஒரு சாபமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த வீரர்கள் தன் திறமையால் ஒலிம்பிக் வீரரை நெருங்கவில்லை, அந்த வீரரை மிஞ்சிவிட்டனர் என்று கூறவே மனம் நினைக்கிறது. உலகில் பல சம்பவங்கள் மாற்றுத்திரனாளிகள் நமக்கு ஒன்றும் சலைத்தவர்கள் அல்ல என்று கூறியிருக்கிறது. அதை இந்த சாதனை இன்னும் ஆணித்தனமாக அடித்து கூறுகிறது.

தன் கடின உழைப்பால் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இந்த வீரர்கள் பாராட்டலாமே! சல்யுட் சகோதரர்களே!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.