'துாய்மை இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக, மஹாத்மா காந்தி பிறந்த நாளான, அக்., 2 முதல், நாட்டின் அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் தேசிய நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளில், பாலித்தீன் பை பயன்பாட்டிற்கு முழு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, மத்திய சுற்றுலா துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால், நாடு முழுவதும், துாய்மை இந்தியா திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா துறையும் இதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பாலித்தீன் பைகளின் பயன்பாட்டால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், மழைநீர் மண்ணுக்குள் செல்வது தடுக்கப்படுகிறது; நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. மண் வளம் குறைந்து, புவி வெப்பமயமாகிறது.
எனவே, நாட்டின் அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் தேசிய நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்களில், பாலித்தீன் பை பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை, மஹாத்மா காந்தி பிறந்த நாளான, அக்., 2ம் தேதி முதல் அமலாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.