தென்னாபிரிக்கா அணியை சேர்ந்த லான்ஸ குளூஸ்னரை அவ்வளவு எளிதில் கிரிக்கெட் ரசிகர்கள் மறந்து விட முடியாது. உலகக் கோப்பை அரையிறுதி போட்டிகளில் 'தி பெஸ்ட் திரில்லர்' என ரசிகர்கள் வர்ணிக்கும் 1999 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடியவர்.
இந்தியாவுக்கு எதிராக 1996 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கூட எடுக்க வில்லை ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் டெண்டுல்கர், டிராவிட் தவிர மற்ற அனைத்து இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டையும் வீழ்த்தினார். அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஒரு இன்னிங்ஸில் எட்டு விக்கெட்டை கைப்பற்றியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவர் மட்டும் தான்.
தென்னாபிரிக்கா அணிக்காக ஆல்ரவுண்டராக விளையாடி கலக்கியவர் தற்போது பயிற்சியாளராகி விட்டார். ஜிம்பாபவே அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் லைக்கா கோவை கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். இவரது பயிற்சியின் கீழ் அந்த அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றிருக்கிறது.
பயிற்சியாளர் அனுபவம் குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துக்கொண்டிருந்தார். அவரிடம் 'இப்போது விளையாடும் வீரர்களில் யார் சிறந்த வீரர்'? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. "விராட் கோஹ்லியும், ஏ, பி டிவில்லியர்ஸும் இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன்கள். ஆனால் "நான் மகேந்திர சிங் தோனியின் தீவிர ரசிகன்" என்றார். " ஐந்து - ஏழு டவுனில் ஒரு பேட்ஸ்மேன் ஆடுவது மிகவும் கஷ்டமான விஷயம். ஒரு அணிக்கு ஃபினிஷராக இருப்பது சாதாரண விஷயமில்லை. அதுவும் ஏதோ ஓரிரு போட்டிகளில் மட்டும் தோனி நல்ல பினிஷிங்க்கை கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடவில்லை, தொடர்ந்து பத்து ஆண்டுகளாக இந்த வேலையைச்செய்து கொண்டிருக்கிறார். இது போதாது என விக்கெட் கீப்பர், கேப்டன் பணியையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். நானும் ஃபினிஷராக இருந்தவர் என்பதால் எனக்கு தோனியை ரொம்பவே பிடிக்கும்" எனச்சொல்லியிருக்கிறார் குளூஸ்னர்.
1999 ஆண்டு உலககோப்பை அரை இறுதி போட்டி கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பிரபலம்.
இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் மைதானத்தில் 1999 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதின. ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 213 ரன்களை எடுத்திருந்தது. தென்னாபிரிக்க அணி பேட்டிங் செய்யும் போது தொடர்ச்சியாக வார்னே பந்தில் விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தது. 31 பந்தில் 39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைமை, கையில் நான்கு விக்கெட் மட்டுமே இருந்தது. பொல்லாக், குளூஸ்னர் இருவரும் களத்தில் இருந்தார்கள். பொல்லாக், பவுச்சர், எல்ஸ்வொர்த் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆக குளூஸ்னர் மட்டும் பவுண்டரிகளாக அடித்து விளாசினார்.
கடைசி ஓவரில் கைவசம் ஒரு விக்கெட் இருக்கிறது ஒன்பது ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலை தென்னாப்பிரிக்காவிற்கு இருந்தது. முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பினார் குளூஸ்னர். நான்கு பந்தில் ஒரு எடுத்தால் வெற்றி என்ற நிலை. இறுதி ஓவரில் மூன்றாவது பந்தில் ரன் அவுட் வாய்ப்பு ஆஸ்திரேலியாவால் கோட்டை விடப்பட, களத்தில் இருந்த குளூஸ்னர், டொனால்டு இருவரும் பதற்றமானார்கள். பேட்டிங் செய்து கொண்டிருந்த குளூஸ்னர் அவசரமாக ஒரு ரன் எடுக்க முனையும்போது, எதிர் முனையில் இருந்த டொனால்டு தவறு செய்து ரன் அவுட் ஆனார். 16 பந்தில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 31 ரன்கள் விளாசிய குளூஸ்னருக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. அன்றில் இருந்து இன்று வரை கடந்த 18 வருடங்களில் எந்தவொரு அரையிறுதி போட்டியிலும் தென்னாபிரிக்கா வென்றதே கிடையாது என்பது தான் சரித்திரம்.
ame> மிக மிக முக்கியமான போட்டிகளில் கடைசி கட்ட டென்ஷன்களில் ஆட்டத்தை கோட்டை விடும் தென்னாபிரிக்க அணியை சேர்ந்த வீரருக்கு, எப்பேர்ப்பட்ட டென்ஷனையும் திறம்பட சமாளிக்கும் தோனிக்கு ரசிகராக இருப்பதில் ஆச்சர்யம் இல்லை தான்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.