காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு குறித்து மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் உட்பட அரசு உயர் அதிகாரிகளுடன் சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதிகாரிகளும் முதல்வருக்கு விளக்கிக்கூறி வருகின்றனர்.
29-ம் தேதி நடக்கும் இருமாநில உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் தனது சார்பில் முன்வைக்கும் கருத்துகளையும் அதிகாரிகளிடம் முதல்வர் எடுத்துரைத்தார். இருமாநில கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் ஆகியோர் பங்கேற்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு மேலும் 3 நாட்களுக்கு 6,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.