Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 28, 2016

காவிரி விவகாரத்தில் இனி பிரச்சனை வேண்டாம்: இஸ்ரேல் கூறும் யோசனை


காவிரி விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே பகையுணர்வு ஏற்பட்டு நாட்டின் தேசிய ஒற்றுமைக்கே கேடு விளைவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருபக்கம் தங்களுக்கே குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என கூறி உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக ஏற்க மறுத்து வருவதால் இருமாநில உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருமாநிலங்கள் இடையிலான நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தையும் ஏற்க அம்மாநிலம் மறுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு போக பாசனம் கூட செய்யமுடியாமல் தமிழக விவசாயிகள் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில் காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்கள் இடையிலான பிரச்சனையை தீர்த்துவைக்க இஸ்ரேல் முன்வந்துள்ளது. தங்களது தொழில்நுட்பங்களும் செயல் முறைகளும் முழு பலன் அளிக்கும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.இது குறித்து இஸ்ரேல் கூறுகையில், அதிக நீரை கோரக்கூடியதான கரும்பை கர்நாடகாவில் பயிரிடுவதும், அதேபோல் அதிக நீர் தேவைப்படுவதான நெல்லை அதிகளவில் தமிழகத்தில் பயிரிடுவதுமே பிரச்சனைக்கு காரணமாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனையை சொட்டுநீர் பாசன முறையில் எளிதாக தீர்த்துவிட முடியும் எனவும் அந்நாடு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துதல், கழிவுநீர் மேலாண்மை போன்றவற்றின் மூலம் இந்த சிக்கலை எளிதில் தீர்த்துவிட முடியும் எனவும் இஸ்ரேல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.  நதிநீர் மேலாண்மை திட்டங்களில் உதவுவது தொடர்பாக இந்திய அரசிடம் ஏற்கனவே இஸ்ரேல் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய அரசு அனுமதி அளித்தால் தங்களது திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் பிரச்சனையை எளிதில் தீர்க்க முடியும் என்றும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.