Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 8, 2016

ஜாக்கிரதை , ஒரு நாள் நீங்களும் நீரழிவு நோயாளியாக முத்திரை குத்தப்படலாம்



இக்கட்டுரை நீரழிவு நோய் இல்லாத ஆரோக்கியமான ஒருவருக்கு இரத்தத்தில் பயணிக்கும் அதிக சர்க்கரையை மட்டுமே கணக்கில் கொண்டு அவரை நீரழிவு நோயாளியாக முடிவு செய்யும் முட்டாள்தனத்தையே சுட்டிக்காட்டப்பட்டுள்ளதே தவிர நீரழிவு நோயாளியைப் பற்றி அல்ல.

குளுக்கோஸ் உடலுக்கு சக்தியை கொடுப்பதாக அதாவது சர்க்கரை உடலுக்கு சக்தியை கொடுப்பதாக ஊட்டச்சத்து பானங்கள் சதா விளம்பரம் செய்து கொண்டே உள்ளது. அதை பருகும் போது உடலில் சர்க்கரை அளவு அதிகமாகும்தானே . இதை ஒரு புறம் சிபாரிசும் செய்கிறார்கள்.
  அதே நேரத்தில் அதற்கு நேர்எதிராக உடலில் சர்க்கரை அதிகமானால் உடலுக்கு ஆபத்து என்ற பிரச்சாரமும் அலோபதி மருத்துவத்தால் செய்யப்பட்டு வருகிறது. சராசரி சர்க்கரை அளவை நிர்ணயம் செய்து அதற்கு அதிகமாக உள்ளவர்களையெல்லாம் நீரழிவு நோயாளியாக முத்திரை குத்துகிறது. ஆனால் இயற்கையில் சராசரி சர்க்கரை அளவு என்பதெல்லாம் இல்லை. உடலுக்கு எந்த அளவு சர்க்கரை தேவையோ அந்த அளவு இரத்தத்தில் சர்க்கரை பயணிக்கும். இதில் குறைவான, அதிகமான, சராசரி என்ற கணக்கெல்லாம் கிடையாது.

    நமது உணவிலிருந்து கிடைக்கும் சத்தே சர்க்கரை ஆகும். சர்க்கரையே நம்மை உயிருடன் வைத்திருக்கிறது. சர்க்கரையே நமது வளர்ச்சிக்கு காரணம். அதிக சர்க்கரையே நமது நோய்களை எதிர்த்து போராடக்கூடியது. அதிக சர்க்கரையே நோய்களை குணப்படுத்தக் கூடியது. அதிக  சர்க்கரையே அதிக நேரம் வேலை செய்ய அதிக சக்தியை தருகிறது. நாம் உண்ணும் உணவானது சர்க்கரையாக மாறி கல்லீரலால் சேமிக்கப்படுகிறது.  கல்லீரலிலிருந்து உடலின் தேவைக்கேற்ப சர்க்கரை இரத்தத்தில் பயணித்து உடல் செல்களை அடைகிறது. உடலுக்கு அதிக சக்தி தேவைப்படும்போது அதிக சர்க்கரை இரத்தத்தில் பயணித்து செல்களுக்கு சென்று சேரும். இரத்தத்தில் பயணிக்கும் அதிகப்படியான சர்க்கரை உடல் செல்களின் தேவைக்கேற்ப மாறுபடும். இதுவே ஒவ்வொரு மனிதனுக்கும் விலங்கிற்கும் பறவைகளுக்குமான இயற்கையின் ஏற்பாடு.

   அதீத பசி, தாகம், உடல் சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் அதிக கழிவு சர்க்கரை இருத்தல் போன்றவையே நீரழிவிற்கான அறிகுறி. அவ்வாறான அறிகுறி இல்லாமல் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தாலும் அவர்கள் நீரழிவு நோயாளிகள் அல்லர். எல்லோர்க்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு பயணிக்க வாய்ப்பு உள்ளது.

    நீரழிவு நோயாளியாக இல்லாத ஒருவரை இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவை காரணம் காட்டி நோயாளி என முத்திரை குத்தி மாத்திரைகளை கொடுத்து சிறிது மாதங்களில் அவரையும் நீரழிவு நோயாளியாக மாற்றிவரும் மருத்துவத்தை வியாபாரம் என்பதை தவிர வேறு என்னவென்பது.

     நீங்கள் உடல்நலம் சரியில்லாதபோதுதான் மருத்துவமனை செல்வீர்கள்.  உடலில் நோயெதிர்ப்பு சக்தி வேலை செய்யும் பட்சத்தில் இரத்தத்தில் அதிக சர்க்கரை பயணிக்கும். நோய் குணமானவுடன் சர்க்கரை அளவு சராசரிக்கு வந்து விடும்.

    இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக பயணிக்கும் போது சர்க்கரை அளவை எடுத்துக் கொண்டு உங்களையும் நீரழிவு நோயாளி என முத்திரை குத்தி விடுவார்கள்.

   எங்காவது இலவசமாக சர்க்கரை பரிசோதனை என சென்றீர்களேயானால் உங்களையும் நீரழிவு நோயாளி என முத்திரை குத்தி விடுவார்கள்.
   உங்களுக்கு நீரழிவு நோய்க்காக மாத்திரை கொடுக்கப்பட்டு நீரழிவு நோயாளியாக்கப்படுவீர்கள்.

  தேவை விழிப்புணர்வு . அதிகம் பகிர்ந்து ஆரோக்கிய பாரதம் அமைத்திடுவோம்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.