தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும். இதனால் ஏற்படும் விளைவுகளை அனைத்து கட்சிகளும் கூட்டாக எதிர்கொள்ளும் என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா கூறி உள்ளார்.
காவிரிப் பிரச்னையில் தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி கர்நாடக அரசும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது. ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகம் முழுவதும் கன்னட அமைப்புகள், விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், காவிரிப் பிரச்னை தொடர்பாக நேற்று முன்தினம் (செப்.20) நடைபெற்ற வழக்கு விசாரணையில் தமிழகத்துக்கு செப்டம்பர் 21 முதல் 27-ம் தேதி வரை விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தவிட வேண்டும். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மண்டியா, மைசூரு, ஹுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் தர்னா, சாலைமறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படங்களை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்
இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவ கவுடா பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''உச்ச நீதிமன்றம் தனது வரம்பை மீறி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவு பிறப்பித்து உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக நிராகரிக்க வேண்டும்.
மேலும், காவிரி நீர் விவகாரத்தில் 3 முறை எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். இப்போது கூட எனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய நான் தயாராக உள்ளேன். காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நியாயமானதல்ல.
இந்த விவகாரத்திற்க்காக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக, தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும். கர்நாடக மக்களின் குடிநீருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால் ஏற்படும் விளைவுகளை அனைத்து கட்சிகளும் கூட்டாக எதிர்கொள்ளும்" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.