Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 6, 2016

குழந்தைகள் குண்டாவதை தடுக்க சில ஆலோசனைகள்


இன்றைய காலத்தில் உடல் பருமன் பெரியவர்களை மட்டும் பாதிக்கவில்லை, குழந்தைகளையும் தான். அதிலும் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமனால், அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதய நோய், தூக்கமின்மை போன்ற நோய்கள் விரைவில் வந்துவிடுகின்றன. ஆகவே அவர்களுக்கு இத்தகைய நோய்கள் எல்லாம் தாக்காமல் இருக்க, தேவையில்லாத கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டாம். ஆனால் அவர்களை கவனமாக பார்த்துக்கொள்வது என்பது சற்று கடினமானது. ஏனெனில் அவர்களுக்கு பிடித்தவற்றை சாப்பிடாமல் வைப்பது என்பது மிகவும் கடினம். மேலும் அவர்களது டயட், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, அதிகமான அளவில் உண்ணுதல் போன்றவைகளும் குழந்தைகளை குண்டாக்குகின்றன.

குழந்தைகள் குண்டாவதற்கு அவர்களின் உடலில் இருக்கும் மரபணுக்கள் பெரும்பாலும் காரணமாகின்றன. ஆகவே மறக்காமல் மருத்துவரை உடனே அணுக வேண்டும். ஏனெனில் மரபணுவில் ஏதாவது திடீரென மாற்றங்கள் ஏற்பட்டாலும், குழந்தைகள் குண்டாவார்கள்.

குழந்தைகளின் உடல் எடை சரியாக உள்ளதா என்பதை அடிக்கடி பார்த்துக்கொண்டே வர வேண்டும். மேலும் அதற்கேற்றவாறு உணவுப்பொருட்களை கொடுக்க வேண்டும். ஏனெனில் அதிகமான உணவுப் பொருட்களை கொடுத்தால், அதில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் குழந்தைகளின் உடலில் சென்று உடல் பருமனை ஏற்படுத்திவிடும். ஆகவே அவர்களின் உயரத்திற்கு ஏற்ப உடல் எடை இருக்குமாறு பார்த்து வரவும்.
குழந்தைகளை எப்போதும் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும். அதாவது, குழந்தைகள் வீட்டில் உட்கார்ந்து டி.வியை பார்த்துக்கொண்டிருந்தால், அவர்களை விளையாட சொல்ல வேண்டும். ஏனெனில் இதனால் குழந்தைகளின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் ஓடுதல், நடத்தல், குதித்தல், சைக்கிளிங் மற்றும் நீச்சல் போன்ற விளையாட்டுக்களை விளையாட வைக்கலாம்.

குழந்தைகளுக்கு அதிகமான அளவில் பாஸ்ட் ஃபுட் உணவுகளான பிரன்ச் ப்ரைஸ், சிப்ஸ், ப்ரைடு சிக்கன், மில்க் ஷேக் போன்றவற்றை கொடுக்க வேண்டாம். ஏனெனில் இவற்றில் அதிக அளவு கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. இதனை அதிகம் சாப்பிட்டால், பிற்காலத்தில் இதய நோய் விரைவில் வந்துவிடும்.

அதிக அளவில் கொழுப்புக்கள் உள்ள பாலைக்கொடுப்பதை விட, குறைந்த அளவில் கொழுப்புக்கள் இருக்கும் பாலை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் பிற்காலத்தில் குண்டு தான் ஆவார்கள்.
பால் பொருட்களை கொடுக்கும்போது கூட, கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகம் உள்ள உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
குண்டாகும் குழந்தைகள் விரைவில் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். ஏனெனில் குண்டாக இருப்பதால், நிறைய பேர் கிண்டல் செய்வார்கள். ஆகவே அவர்கள் எடையை குறைக்க ஊக்குவிப்பதோடு, அவர்களுடன் அன்பாக, பாசத்துடன் நடக்க வேண்டும்.

மாலை வேளையிலோ அல்லது மற்ற வேளைகளிலோ, அவர்களுக்கு உண்ண உணவுகளை கொடுக்கும் போது, ஆரோக்கியமற்ற உணவுகளைக் கொடுக்காமல், அவர்களுக்கு ஏதேனும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.