September 2, 2016
மாணவி மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய பட்டதாரி மீது வழக்குப் பதிவு!
திருச்சி அருகே, மாணவி மோனிஷா மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய பொறியியல் பட்டதாரி பாலமுருகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி, கொள்ளிடம் அருகே உள்ள பிச்சாண்டவர் கோயில் பகுதியை சேர்ந்த பாத்திமா என்பவரின் மகள் மோனிஷா, தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர், கல்லூரி முடித்து விட்டு, கொள்ளிடத்திலிருந்து பிச்சாண்டவர் கோயிலுக்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பாலமுருகன் என்பவர், கத்தியால் மாணவியின் வயிறு, முதுகு, மற்றும் கால் பகுதி என மொட்ய்ஹ்தம் 8 இடங்களில் சரமாரியாகத் தாக்கி, தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
உடலில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட மோனிஷா, திருச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்கொலைக்கு முயன்ற பாலமுருகன், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒருதலைக் காதலால் மாணவி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, பாலமுருகன் மீது, கொலை முயற்சி, பெண் வன்கொடுமை, வழிமறித்து தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ், கொள்ளிடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவி மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய பட்டதாரி மீது வழக்குப் பதிவு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 02, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 02, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.