Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 21, 2016

பொறையாறு அருகே கல்லூரி மாணவி அடித்து கொலை மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு


பொறையாறு அருகே கல்லூரி மாணவியை அடித்து கொலை செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

செல்போனில் பேசியபடி...

நாகை மாவட்டம் பொறையாறு அருகே அப்பராசபுத்தூர் வாய்க்கால்கரை தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகள் தீபிகா(வயது18). இவர் பூம்புகார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தந்தை ரவிச்சந்திரன் இறந்துவிட்டார். இதனால் தீபிகாவும் இவருடைய தாய் சுமதி (40) என்பவரும் தனியாக வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் தீபிகாவின் செல்போனுக்கு அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது செல்போனில் பேசியபடி அருகில் உள்ள வீட்டுக்கு சென்று வருவதாக சுமதியிடம் கூறிவிட்டு தீபிகா சென்றார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உடனே சுமதி, தீபிகாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது மறுமுனையில் பேசிய நபர் தீபிகாவின் செல்போன் ரோட்டில் கிடந்ததாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடியும் தீபிகா கிடைக்கவில்லை.

கல்லூரி மாணவி கொலை

இந்தநிலையில் நேற்று காலை அருகே உள்ள ராஜேந்திரன் வாய்க்காலில் தலையில் பலத்த காயத்துடன் தீபிகா பிணமாக கிடந்தார். அருகில் மண்வெட்டியின் கைப்பிடி கிடந்தது. அதில் ரத்தக்கறை படிந்து இருந்தது. எனவே அவர் மண்வெட்டி கைப்பிடியால் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபிகாவை அடித்து கொலை செய்த மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.