Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 7, 2016

சுரங்கப்பாதையில் செயினை பறித்த கொள்ளையனுடன் போராடிய பெண்…!!



ஸ்டேன்லி அரசு மருத்துவமனை அருகே உள்ள சுரங்க பாதையில் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது.
பழைய வண்ணாரப் பேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவி. இவர் ராயபுரத்தில் உள்ள ஆதி திராவிடர் மாணவியர் விடுதியில் சமையல் வேலை செய்து வருகிறார்.
நேற்று மாலை 3 மணி அளவில் மாதவி ஸ்டேன்லி ஆஸ்பத்திரி அருகே உள்ள சுரங்க பாதையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் மாதவி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பிடித்து இழுத்தான்.
மாதவியும் நகையை பிடித்து இழுத்து கொண்டு கொள்ளையனுடன் போராடினார். அதில் செயின் அறுந்து கொள்ளையன் கையில் 3 பவுனும், மாதவி கையில் 2 பவுனும் சிக்கியது. 3 பவுன் நகையுடன் கொள்ளையன் ஓடினான். அவனை பிடிக்க மாதவியும் துரத்தி சென்றார். கொள்ளையன் வண்ணாரப்பேட்டை ரெயில்வே தண்டவாளம் வழியாக தப்பி ஓடி விட்டான்.
இதுகுறித்து பழைய வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். இதே சுரங்கபாதையில் கடந்த வாரம் மல்லிகா என்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்றனர் என்பது குறிப்பிடதக்கது.
தொடர்ந்து இந்த சுரங்க பாதையில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பதால் போலீசார் இங்கு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.