Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 29, 2016

தலைநகரில் தொடரும் விபச்சார விடுதிகள்



தலைநகரில் தொடரும் விபச்சார விடுதிகள்

கொழும்பு: மாலபே பிரதேசத்தில் நடாத்திச் சென்ற விபச்சார விடுதிக்கு குறித்தப் பிரதேச மக்கள் கல்லெறி தாக்குதல் நடத்தியுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும் மாலபே ரொபட் குணவர்த்தண மாவத்தையில் குறித்த விபச்சார விடுதியை நடாத்திச் செல்பவர் அரசியல்வாதி ஒருவரின் செயலாளர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொள்ளுப்பிட்டியிலிருந்து குறித்த விபச்சாரிகள் அழைத்து வரப்படுவதாகவும், இவர்கள் வெளிநாட்டுப் பெண்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களும், இலங்கையில் உள்ள செல்வந்தர்களுமே குறித்த விபச்சார விடுதியை தேடி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தங்கும் விடுதியாகவே குறித்த விபச்சார விடுதி நடாத்தி வந்துள்ளதாகவும், இதற்கு அண்மையில் இரண்டு பிரதான பாடசாலைகள் அமைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.