சென்னை: தமக்கு வேண்டப்பட்ட ஒருவரை எம்.பி.யாக்க என்னை ராஜினாமா செய்ய சொல்கிறார்கள் என அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா கூறியிருந்தார். தற்போது தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவின் இல. கணேசன், மத்திய பிரதேசத்தில் இருந்து எம்.பி.யாக்கப்பட்டிருப்பதால் இவரைத்தான் அதிமுக ஆதரவுடன் எம்.பி.யாக்க பாஜக முயற்சித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
திமுக எம்பி திருச்சி சிவாவை தாக்கியதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா தம்மை எம்.பி. பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உத்தரவிட்டார்; ஆனால் நான் ராஜினாமா செய்யமாட்டேன் எனக் கூறி வந்தார் சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா புகார்
மேலும், தங்களுக்கு வேண்டிய ஒருவரை எம்.பி.யாக்கவே என்னை ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்கள் எனவும் அவர் கூறி வந்தார். ஆனால் அது யார் என சசிகலா புஷ்பா பகிரங்கப்படுத்தவில்லை.
அதிமுக ஆதரவுடன்?
தற்போது தமிழக பாஜக மூத்த தலைவரான இல. கணேசனை, மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக்க உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. அனேகமாக இல. கணேசனை அதிமுக ஆதரவுடன் பாஜக ராஜ்யசபா எம்.பி. யாக்க முயற்சித்திருக்கலாம்.
சசிகலா புஷ்பா இடத்தில்...
அப்போது சர்ச்சைகளில் சிக்கியிருந்த சசிகலா புஷ்பாவை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு அந்த காலி இடத்துக்கான தேர்தலில் இல. கணேசனை நிறுத்தலாம் என பாஜக திட்டமிட்டிருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து வருவதால் ஜெயலலிதாவும் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கலாம்.
அப்ப நடக்கலை...
ஆனால் சசிகலா புஷ்பா ராஜினாமா செய்ய மறுத்து ஜெயலலிதா மீதே புகார் கூறினார். அதனால் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.. இல. கணேசனை எம்.பி.யாக்கும் பாஜகவின் முடிவு தள்ளிப் போய் தற்போது நிறைவேறியிருக்கிறது என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.