Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 29, 2016

​ராம்குமார் பிரேதப் பரிசோதனை வழக்கு இன்று விசாரணை!



ராம்குமார் பிரேதப் பரிசோதனையில் தனியார் மருத்துவரை அனுமதிக்கக் கோரி அவரது தந்தை பரமசிவம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ராம் குமார் புழல் சிறையில் கடந்த 18ஆம் தேதி மின்சார ஒயரைக் கடித்துத் தற்கொலை செய்துகொண்டதாகச் சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய, தந்தை பரமசிவம், பிரேதப் பரிசோதனைக்குத் தாங்கள் விரும்பும் மருத்துவர் ஒருவரையும் நியமிக்க வேண்டும் எனக் கோரிச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் வெவ்வேறு முடிவுகளைத் தெரிவித்ததால் மூன்றாவதாக விசாரித்த நீதிபதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டார். இதை ஏற்க மறுத்த பரமசிவம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரித் தலைமை நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தை அணுக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதனைத்தொடர்ந்து, ராம்குமார் பிரேதப் பரிசோதனையின்போது தங்கள் சார்பில் தனியார் மருத்துவர் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என்றும், வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி பரமசிவம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.