September 15, 2016
தொடரும் ஒருதலைக் காதல் வெறிச்செயல்: கோவை இளம்பெண்ணை கொலை செய்த இளைஞர் கேரளாவில் தற்கொலை முயற்சி!
பாலக்காடு: ஒரு தலைக் காதலால் கோவையைச் சேர்ந்த இளம்பெண் தன்யாவை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கேரளாவில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அன்னூர் தென்னம்பாளையம் சாலை டெய்லர் சோமுவின் மகள் தன்யா. இவர் பொங்கலூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
தன்யாவை அவரது பக்கத்து வீட்டில் தங்கி பேக்கரியில் வேலை பார்த்து வந்த சகீர் என்ற கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால் சகீரின் காதலை தன்யா ஏற்க மறுத்துவிட்டார்
திருமண முயற்சி
ஆனாலும் சகீர் விடாப்பிடியாக தன்யாவை ஒருதலையாக காதலித்து வந்தார்.
இதனால் சகீரை தன்யாவின் பெற்றோரும் கண்டித்துள்ளனர். அத்துடன் தன்யாவுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர்.
கத்தியால் குத்தி கொலை
இதை அறிந்த சகீர், நேற்று தன்யா வீட்டில் தனியாக இருந்த போது அவரை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவானார். இதனிடையே சகீரை போலீசார் தேடி வந்தனர்.
கேரளாவில் தற்கொலை முயற்சி
அப்போதுதான் கேரளாவுக்கு தப்பி ஓடிய சகீர் பாலக்காட்டில் உள்ள தமது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. ஆனால் சகீரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தொடரும் விபரீதம்
இதைத் தொடர்ந்து பாலக்காடு விரைந்த கோவை போலீசார் சகீரை கைது செய்ய உள்ளனர். சென்னை சுவாதி, கரூர் சோனாலி, தூத்துக்குடி பிரான்சினா வரிசையில் ஒருதலைக் காதலால் கோவை தன்யாவும் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் ஒருதலைக் காதல் வெறிச்செயல்: கோவை இளம்பெண்ணை கொலை செய்த இளைஞர் கேரளாவில் தற்கொலை முயற்சி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 15, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 15, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.