September 6, 2016
தமிழகத்திற்கு தண்ணீர் : கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.
காவிரி நதிநீர் வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்ய பதில் மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழகத்திற்கு நாள் ஒன்றிற்கு 15,000 கனஅடி வீதம் 10 நாட்களுக்க தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதனால் காவிரி நதிநீர் வழக்கில் கர்நாடகாவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் அம்மாநில விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மான்டியா, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கேஆர்எஸ் அணையின் நுழைவு வாயில் பகுதியிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் அணையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் இறங்கியும், மான்டியா மாவட்டத்தில் விஸ்வேஸ்ரய்யா சிலை முன்பு நூற்றுக்கணக்கான விவசாயிகள் கூடியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மைசூரு - பெங்களூரு நெடுஞ்சாலையில் சாலையில் கருப்பு போர்வை போர்த்திக் கொண்டு, விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹூப்ளி மாவட்டம் சங்கொளி ராயன்னா பகுதியில் மகதாயி நதிநீர் போராட்ட விவசாயிகள் சங்கத்தினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்தும், ஜெயலலிதாவிற்கு எதிராக கோஷமிட்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் மைசூரில் அந்த அளவிற்கு போராட்டம் தீவிரமடையவில்லை. ஆனால் நாளை முதல் தீவிர போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். தீர்ப்பு நகல் கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்
தமிழகத்திற்கு தண்ணீர் : கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 06, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 06, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.