September 23, 2016
பிரேத பரிசோதனை வழக்கில் ராம்குமார் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு
ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கில், ராம்குமாரின் தந்தை தரப்பு மருத்துவரை நியமிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சுவாதி படுகொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதியான ராம்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ள ராம்குமாரின் பிரேத பரிசோதனையில், ராம்குமாரின் தந்தை பரமசிவன் தரப்பில் ஒரு மருத்துவர் இடம் பெற வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள், இரு வேறு தீர்ப்புகளை வழங்கியதை அடுத்து, 3 வது நீதிபதியாக கிருபாகரன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கில் நீதிபதி கிருபாகரன் இன்று தனது தீர்ப்பை வழங்கினார்.
இதில் பிரேத பரிசோதனை வழக்கில், ராம்குமார் தரப்பு கோரிய மருத்துவரை நியமிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார். மேலும் பிரேத பரிசோதனையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவரை 5வது மருத்துவராக நியமித்தது நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
செப்டம்பர் 27ம் தேதிக்குள் எய்ம்ஸ் மருத்துவரை முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை வழக்கில் ராம்குமார் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 23, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 23, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.