September 18, 2016
பாழடைந்து கிடந்த வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு!
புதுச்சேரியில் பாழடைந்து கிடந்த வீடு ஒன்றில், நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி முதலியார்பேட்டை சுந்தர்ராஜி நகரில் ராதா என்பவருக்கு சொந்தமான பாழடைந்த பூட்டிய வீட்டில் நேற்றிரவு சுமார் 9 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது.
சத்தத்தை கேட்டு அந்த வீதியில் வசித்து வருபவர்கள் வெளியே வந்து பார்த்தபோது அக்கட்டிடத்திலிருந்து 10-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் ஒடி தலைமறைவாகினர்.
இக்கட்டிடத்தில் சமூக விரோதிகள் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாழடைந்து கிடந்த வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 18, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 18, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.