Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 21, 2016

அந்தக் கால அந்தங்ரகம்



சின்னஞ்சிறுசுகளுக்கே சர்வசாதாரணமாக சர்க்கரை நோய் எனும் காலத்தில், நோய் நொடி எதுவுமின்றி 100 வயதை நெருங்கிவர... உற்சாகமாக நடைபோட்டு வருகிறார்கள், நெல்லை கிராமங்களில்.
வானம் பார்த்த கரிசல் பூமியான கோவில்பட்டி அருகில் இருக்கும் கொளக்கட்டாகுறிச்சி, மைப்பாறை, சிப்பிபாறை, நடுவப்பட்டி, சீவன்பட்டி ஆகிய கிராமங்களில், சுறுசுறு முதியவர்களைப் பார்க்க, ஆர்வத்துடன் பயணமானோம்.
இந்தப் பகுதி, நெல்லை மாவட்டத்தில் இருந்தாலும், தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி மற்றும் விருதுநகர் மாவட்ட எல்லையைத் தொட்டுக்கொண்டு இருக்கிறது.
கொளக்கட்டா குறிச்சி கிராமத்தில், தெம்பாக நடந்து வந்த 90 வயது கடந்த பெரியசாமி, வெண்கலக்குரலில் பேசி னார்.
""மறைக்கிறதுக்கு என் னய்யா இருக்கு, தட்டட்டிக் குள்ள (நான்கு சுவருக்குள்) நடக்கிறதச் சொல்றதில் கூச்சநாச்சம் என்னயிருக்கு? வெந்ததைத் தின்னு விதி வந்தாச் சாவுங்கிற காலத்தில வாழ்ந்தவங்கய்யா நாங்க, எதுலயும் ஒரு கட்டுப்பாடு ஒரு திட்டம் இருந்தது. இப்ப உள்ள வைத்திய வசதிகள், சோறுதண்ணி, போக்கு வரத்து வசதியெல்லாம் அப்போ இல்லை. என்னவோ நெஞ்சடைப்புனு சொல்றாங்க. அல்ப ஆயுசுல அந்த நோயில போயிடுதாம். எங்க காலத்தில இப்படி ஒன்றைக் கேள்விப்பட்டதே இல்லைய்யா. நொறுங்கத் தின்னா 100 வயசுனு சொல்வாங்க, அரிசிச் சோறப் பாத்ததே கெடையாது. சோளச்சோறையும், கம்பங் கஞ்சியையும் குடிச்சிட்டு வெவசாயக் காட்டுக்கு வேலைக்குப் போவோம். நாலு வண்டிக் குப்பை மண்ண நா ஒருத்தனே காட்டுல செதறுவேன். வெளியூர் போகணும்னா, எத்தன மைல்னாலும் நடைதான். அலுப்புத் தெரியாம இருக்க, பாடிக்கிட்டே போவோம். புளியஞ்சாதத்தப் பொட்டலம்கட்டி மருதை (மதுரை)க்கி நடந்தே போய்வந்திருக்கேன்யா. உழைப்பும் நடையும்தான் எங்க ஒடம்புல உரமேத்தியிருக்கு. 92 வயசு நடக்குது, எனக்கு. இன்னமும் உடம்புல ஊக்கமிருக்கு. கண்ணாடி போடலை, ஊசியில நூலைக் கோர்த்துருவேம். ஒங்களால முடியுமா? அள்ளி அள்ளி, சீனி கருப்பட்டி போட்ட காப்பிய சாப்புடுவேன்; எம்பல்லு ஒண்ணுகூட விழல பாருய்யா. எம் பெஞ்சாதிக்கு வயசு 86, களை பெறக்கப் போயிருக்கா. எங்களைப்போல சுத்துப்பட்டு கிராமத்திலயும் இருக்காவ.’’



ஒவ்வொரு காரியத்திலும் திட்டமிருக்கும். சடங்கு சம்புரதாயங் கள மீறமாட்டோம். வீட்டுக்கு வர்ற மருமவ ஆனாலும், கட்டிக் குடுக்குற பொண்ணுனாலும் பல காரியங்கள நோட்டம் போட்டுப் பாப் போம். "சுழியப் பாத்து மாட்டப்புடி, கோத்திரத்தப் பாத்துப் பெண்ணக் குடு'ங்றாப்புல, உழவு மாடு புடிக்கிறதிலயும், ஆணும், பொண்ணும் ஒண்ணா சேர்றதுலயும்கூட பொருத்தம் பாத்துத்தான் முடிப்போம்'' என்று கதையைப் போல விவரித்தவர்...

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.